பனி விழும் இரவு திரை விமர்சனம் !
கொடைக்கானலில் உள்ள மர்மமான விருந்தினர் இல்லத்தில் தங்கும் காதல் ஜோடியை சுற்றி நடக்கும் திகில் சம்பவங்களே ‘பனி விழும் இரவு’ படத்தின் கதை. நாயகி திடீரென மாயமாக, அவரை தேடும் நாயகன் பல மர்மங்களையும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் எதிர்கொள்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் அருண் கார்த்திக், உணர்ச்சிகரமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். எனாக்ஷி கங்குலி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜெயக்குமார் தங்கவேலின் ஒளிப்பதிவு, கொடைக்கானலின் அழகையும் மர்மமான சூழலையும் சிறப்பாக காட்சிப்படுத்துகிறது. சதாமுருகனின் பின்னணி இசை திகில் உணர்வை அதிகரிக்கிறது.
வித்தியாசமான கதைக்களத்துடன், தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பையும் மர்மத்தையும் தக்கவைத்திருக்கிறார் இயக்குநர் செ.ரா.ராஜேஷ். சில சிறிய குறைகள் இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்களும் இறுதிக்கட்ட அதிர்ச்சியும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
மொத்தத்தில், திகிலும் திரில்லரும் கலந்த சுவாரசியமான திரைப்படம் – ‘பனி விழும் இரவு’.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை