சற்று முன்



செய் செய்யாதே திரை விமர்சனம்‌ !



மருத்துவத்துறையில் அதிகரித்து வரும் மோசடிகள், பணத்திற்காக நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் பேராசை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘செய் செய்யாதே’.

மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் சந்திரபோஸ் (எஸ்.ராஜா), நேர்மையான மருத்துவராக ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறார். ஆனால், அவரது மனைவியும் மகன் குரு விஜயும் மருத்துவத்துறையை பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர். இந்த குற்றங்களின் பின்னணியை கண்டறிய களமிறங்கும் சந்திரபோஸ், தனது மகனே குற்றவாளி என்பதை அறியாமல் விசாரணையைத் தொடர்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் எஸ்.ராஜா, இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குரு விஜய், தர்ஷினி ரெட்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் எச்.ராஜா படத்திற்கு பலம் சேர்க்கிறார்.

ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை ஆகியவை கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. படத்தொகுப்பு கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.

மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகள், நோயாளிகளிடம் பணம் பறிக்கும் அவலங்கள் குறித்து தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜாவின் முயற்சி பாராட்டுக்குரியது. சில குறைகள் இருந்தாலும், சமூக அக்கறையுடன் உருவாகியிருக்கும் இப்படம் மருத்துவத்துறையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மொத்தத்தில், சமூக அக்கறை கொண்ட துணிச்சலான படைப்பு – ‘செய் செய்யாதே’.

Rating : 3 / 5 




கருத்துகள் இல்லை