எனிமி ஆஃப் தி ஸ்மக்லர் திரை விமர்சனம் !
துறைமுக சுங்கத்துறை மற்றும் கடல் வழி போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’.
தந்தை கட்டிய வீட்டை மீட்பதற்காகத் தவறான பாதையில் பயணிக்கும் சரண் சக்தி, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைகிறார். அதேவேளையில், கடத்தலைத் தடுத்து குற்றவாளிகளைக் கைது செய்யும் முயற்சியில் இந்திய வருவாய் சேவை அதிகாரியான சமயம் முரளி ஈடுபடுகிறார். இவர்களுக்கிடையிலான மோதலே படத்தின் கதை.
சரண் சக்தி கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தமான நடிப்பை வழங்கத் தடுமாறுகிறார். நாயகி ஸ்மேகா கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஜெ.டி.சக்கரவர்த்தி வில்லத்தனமான நடிப்பில் மிரட்டுகிறார். சமயம் முரளி கம்பீரமான தோற்றத்துடனும் நம்பிக்கையான நடிப்புடனும் கவனம் ஈர்க்கிறார். லால், ராதிகா, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
கே.ஏ.வி. பாஸ்கரின் ஒளிப்பதிவு, சாம் டேனியலின் இசை மற்றும் ஸ்ரீவத்சனின் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
கடல் வழி கடத்தல், சுங்கத்துறையின் செயல்பாடுகள், வரி ஏய்ப்பு போன்ற விஷயங்களை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சமயம் முரளி. இருப்பினும், நாயகனின் பலவீனமான நடிப்பு படத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது.
மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களமும் விறுவிறுப்பான காட்சிகளும் கொண்ட ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ ரசிக்க வைக்கும் படம்.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை