சற்று முன்



இந்த கிரைம் தப்பில்லை திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆடுகளம் நரேன் நடிப்பில் மற்றும் பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். பரிமளவாசன் இசையில் கார்த்திகேயன் ஒளிப்பதிவுவில் தேவகுமார் இயக்கத்தில் வெளிவந்துஇ இருக்கும் படம் இந்த கிரைம் தப்பில்லை

செல் போன் கடையில் வேலை பார்க்கிறார் மேக்னா. அப்போது, அங்கு வரும் 3 இளைஞர்களை வேறு வேறு பெயரில் தன் பின்னால் சுற்ற வைக்கிறார் மேக்னா.

அதே சமயத்தில், ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன், சைலண்டாக ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார். இந்த ஆப்ரேஷனை பாண்டி கமலை வைத்து நடத்த திட்டம் தீட்டுகிறார் ஆடுகளம் நரேன்.

மேக்னா எதற்காக அந்த இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.?? ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்கிறார்.?? இதுதான் படத்தின் கதை.

பெண்களை அவர்களது உரிமை இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் செய்து அவர்களை கொலை செய்யும் காமவெறி பிடித்த மிருகங்களுக்கு தண்டனை நாம் கொடுத்தாலும் தப்பில்லை என்ற லைனில் கதை எழுதப்பட்டிருக்கிறது.

ஆடுகளம் நரேனின் நடிப்பு நன்றாக உள்ளது அவர் தான் படத்திற்கு முக்கிய கதாபாத்திரமாக உள்ளார்.

  பாண்டி கமல் எப்போதும் வெறி பிடித்தவராகவே சுற்றித் திரிகிறார். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சொல்லப்பட வேண்டிய கதையை எடுத்திருப்பதால் இயக்குனருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

திரைப்படம் சமூகத்திற்கு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை