சற்று முன்



KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது !


ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது !

பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கு பொதுவான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சாதாரணமாக, இது அரிதான ஒரு நோய் அல்ல. நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு (World Stroke Organization) கூறுகிறது. எனவே, மிகவும் பரவலாக உள்ள இந்தப் பிரச்சனையை நாம் உணர்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். 

மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் தடை ஏற்படும் பொழுது (Acute Ischaemic Stroke), அல்லது மூளையில் இரத்தப்போக்கு ஏற்படும் பொழுது (Hemorrhagic Stroke) பக்கவாதம் ஏற்படலாம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும், அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். தற்போதுள்ள நவீன வசதிகள் மூலம், பக்கவாதத்தை குறைக்கவோ அல்லது மீண்டும் பழைய நிலைக்கு மாற்றியமைக்க முடியும் என்பதால், நோயாளி விரைவில் பக்கவாதம் மையத்தை அடைவது அவசியம். அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் மற்றும் இயலாமை குறைக்கப்படலாம். ஆனால், இதில் மிக முக்கியமானது நோயாளிகள் சரியான நேரத்திற்கு பக்கவாதத்திற்கான சிறப்பு மையத்தை அடைய வேண்டும். ஏனெனில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நொடிக்கும் 30,000 மூளை செல்களும்,  ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2 மில்லியன் மூளை செல்களும் இறக்கின்றன. 

ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள், WSO வின் மதிப்புமிக்க ‘கோல்ட் ஸ்டேட்டஸ்’ ஏஞ்சல்ஸ் விருதை பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிலையில் காவேரி ஒருங்கிணைந்த பக்கவாதம் மையம் KISC தொடங்கப்பட்டுள்ளது. பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த குழாய்கள் தொடர்பான கோளாறுகள் அனைத்துக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிப்பதற்கான மேம்பட்ட நவீன மையமாகும். 

“காலத்தின் அவசியத்தை உணர்ந்து, எத்தகைய தடையற்ற மருத்துவ வசதிகளை ஒருங்கிணைந்து, நோயாளிக்கு மிகச் சிறப்பான மருத்துவச் சேவை அளிப்பது இம்மையத்தின் நோக்கமாகும். அவசர கால முதலுதவி அறையில் இருந்து (ER), ரேடியாலஜி, நரம்பியல், நரம்பியல் ICU, நியூரோ இன்டர்வென்ஷன், நியூரோ OT மற்றும் நியூரோ ரிஹேபிலிடேஷன் என ஓர் இலகுவான நெறிமுறை அடிப்படையில் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து இருக்கிறது.  இந்த மையம், தற்போது உலக பக்கவாத அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. KISC இல், தொழிநுட்பம் மிக்க அனுபவம் வாய்ந்த, பக்கவாதம் மேலாண்மையில் சிறந்த மருத்துவக் குழு உள்ளது” என்று நரம்பியல் குழு வழிகாட்டியும், மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் இயக்குநருமான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர் கூறினார். 

“பக்கவாத நோயாளிகளுக்கு, ஒரு நொடி தாமதம் கூட மிகப் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். பக்கவாத அறிகுறிகள் தோன்றிய 60 நிமிடங்களுக்குள், அல்லது 24 மணி நேரத்திற்குள்ளாகவாவது அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டால், காவேரி ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தில் உள்ள குழுவினர், பக்கவாதத்தில் இருந்து பழைய நிலைக்கு நோயாளிகளை மீட்டெடுக்கவும், சிறந்த சிகிச்சையை அளிக்கவும் முடியும். ஒரு மேம்பட்ட நவீன பக்கவாதம் மையமாக, சர்வதேச தரத்திலான பராமரிப்பு மற்றும் தடையற்ற, ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையின் மூலம் அவர்களுக்குச் சிறந்த சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம்” என்று ரேடியல் ரோட்டில்  உள்ள காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் அனில் BG கூறினார். 

சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி மருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், மேம்பட்ட கேத் லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.



கருத்துகள் இல்லை