சற்று முன்



சென்னை காரப்பாக்கத்தில் அப்போலோ மருத்துவமனை மையம் திறப்பு !


சென்னை காரப்பாக்கத்தில் அப்போலோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அப்போலோ கருத்தரித்தல் மையம் திறப்பு

சென்னை, 16, நவம்பர் 2022: சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் அப்போலோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அப்போலோ கருத்தரித்தல் மையத்தை அப்போலோ மருத்துவ குழுமத்தின் துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நடிகையும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளரான கீர்த்தி சாந்தனு, நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடன இயக்குநர் ஜெயந்தி விஜய் ஆகியோர் பங்கேற்றனர். அப்போலோ மருத்துவ குழுமத்தின் துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், இந்த மருத்துவமனை குழந்தைகள் நலம், மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும். மருத்துவமனை மகளிர் மற்றும் குழந்தைகள், கருத்தரித்தல், இயற்கை பிரசவம் மற்றும் வலி இல்லாத பிரசவம், பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சேவைகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் என்றார். அப்போலோ மருத்துவமனை மகளிர் மற்றும் குழந்தைகள் நல சேவையில் நோயாளிகளை முதன்மையாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, உயர்தர மருத்துவ பராமரிப்பு, கைதேர்ந்த மருத்துவ குழுவினருடன் துவங்கினர். அப்போலோ குழுவின் இதர வசதிகளுக்கு ஏற்ப, அப்போலோ மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் கருத்தரிப்பு மருத்துவ சேவைகளை வழங்கும்.

சுமார் நாற்பது ஆண்டு கால மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் அப்போலோ குழுமத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில் நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட குழந்தைகள், மகளிர் மற்றும் தாய்மார்களுக்கென தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.


அதிநவீன தொழில்நுட்பத்துடன் நன்கு திட்டமிடப்பட்ட வடிவமைப்பு, கைதேர்ந்த உள்கட்டமைப்பு, கண்ணை கவரும் உள் அலங்காரங்கள், உயர்தர வர்ணங்கள் மற்றும் குடும்பத்தினரை மையமாகக் கொண்டு இளம் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

முழு அர்ப்பணிப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவ குழு மூலம் 24 மணி நேரம் பச்சிளம் குழந்தை, குழந்தைகள் நலம், பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ பராமரிப்பு என மூன்று சேவைகளை வழங்கும். சிறப்பு வசதிகள்:

மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்காக 39 படுக்கைகள் கொண்ட பிரிவு. 12 படுக்கைகள் கொண்ட மூன்றாம் நிலை-3 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு. 

ஒருங்கிணைந்த பிரத்யேக கரு மருத்துவம் மற்றும் சிக்கலான மகப்பேறு பிரிவு. தீர்வளிக்கும் பிரிவு. (IVF) 4 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை காரப்பாக்கத்தில் புதியதாக தொடங்கப்பட்ட அப்போலோ கருத்தரித்தல் மையம் சென்னை அண்ணா நகர் மையத்தைத் தொடர்ந்து இரண்டாவதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது அப்போலோ குழுமத்தின் 18 ஆவது கிளையாகும். இந்த மையம் அதிநவீன உள்கட்டமைப்புடன் ஐ.வி.எஃப். ஆய்வகம், கருத்தரித்தலுக்கு முன் மற்றும் பிந்தைய சிகிச்சை, பராமரிப்பு, வழிகாட்டுதல், சிகிச்சைக்கு முன், பின் உள்ள நெறிமுறைகளை கொண்டதாகும். மேலும் கருத்தரித்தல் தொடர்பான அனைத்து வசதிகள், மேம்படுத்திய லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனை தொடக்க விழாவில் அப்போலோ ஹெல்த் அன்ட் லைப் ஸ்டைல் லிமிடெட் தலைமைச் செயல் அலுவலர் திரு சி.சந்திரசேகர் பேசியது: அப்போலோ மருத்துவமனையின் விரிவாக்கத்தின் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சேவை தவிர, கருத்தரித்தல் சேவையில் மருத்துவத்துறைக்கும், நாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவோம். அதி நவீன தொழில்நுட்பம், உலகத்தரத்திலான கருத்தரித்தல் சிகிச்சை செய்வதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை