Header Ads

சற்று முன்கருணை கொலை செய்துவிட்டார் மணிரத்தினம் பொன்னியின்செல்வன் 2 திரை விமர்சனம் !


அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை, எம்ஜிஆர் காலம் தொட்டு பலர் படமாக்க முயன்றனர்.  அந்த எட்டாக்கனி கிடைத்தது என்னவோ மணிரத்தினம் அவர்களுக்கு மட்டும்தான்.  பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போதே கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன.  ஆனாலும் படம் வசூல் ரீதியாக பெருவெற்றியைப் பெற்றது. அதற்கு அடுத்து இன்று பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகி உள்ளது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் பலத்த ஏமாற்றத்தையே கொடுத்தது.  பொன்னியின் செல்வனின் முதல் பாகத்திற்கு எந்த அளவுக்கு பிரமோஷன் இருந்ததோ அதே அளவிற்கு தான் இரண்டாம் பாகத்திற்கும் பிரமோஷன் லைக்கா ப்ரொடக்ஷன் சைடு இருந்து கிடைத்தது.  ஆனாலும் அந்த ப்ரொடக்சன் மக்களை சரியாக சென்றடைந்ததா என்றால் கிடையவே கிடையாது.  சென்றமுறை பொன்னியின் செல்வன் படத்தைக் லைக்கா ப்ரொடக்சன்னே தமிழகம் முழுவதும் வெளியிட்டது. ஆனால் இந்த முறை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ரெட் ஜெயின் மூவிஸ்க்கென்றே ஒரு மக்கள் தொடர்பாளர் உள்ளார். விக்ரமுக்கு என்று ஒரு மக்கள் தொடர்பாளர் உள்ளார்   நடிகர் கார்த்திக்க்கு என்று ஒரு மக்கள் தொடர்பாளர் உள்ளார்.  இந்த மூன்று மக்கள் தொடர்பாளர்களும் அவர்களின் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்வதற்காக பலமாக போட்ட "போட்டா போட்டியால்" படம் பெரிய சரிவைத்தான் சந்தித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த மூன்று பேரின் மும்முனைப் போட்டியில் இறுதியாக ஒரு மக்கள் தொடர்பாளருக்கு அந்த படம் கைக்கு சென்று அடைகிறது. அவருக்கோ பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரே கிடையாது. ஆனாலும் லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ்னின் மேல் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்த காரணத்தினால் பத்திரிகையாளர்கள் பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடாமல் அமைதியாக சென்று அந்தப் படத்துடைய பிரமோஷன்க்காக செய்திகளை பாரபட்சம் பார்க்காமல் வெளியிட்டனர்.  இருந்தாலும் அந்த மக்கள் தொடர்பாளருடைய செய்கைகள் ஒவ்வொரு நிகழ்விலும் பத்திரிகையாளர்களுக்கு அதிருப்தியே தந்தது. படம் வெளிய ஆவதற்கு முந்தியே இரவு வரை பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்தியேக காட்சி எப்பொழுது போடுவது என்று முடிவே வராமல் மாறி மாறி அவர்களுக்குள் போட்டி போட்டு  கொண்டே இருந்தனர். பாகம் 2 மக்களிடத்தில் சென்றடையாததற்கான முதல் காரணமாகவே இது தெரிகிறது.  இரண்டாவது காரணம் இயக்குனர் மணிரத்னம்.  கல்கி எழுதிய நாவலை அப்படியே எடுத்திருந்தாலே கூட படம் நன்றாக இருந்திருக்கும்.  நாவலில் உள்ள விஷயங்களை நான் விஷ்வலாக காட்டுகிறேன் பேர்வழி என்று அந்தக் கதையின் சுவாரசியமான சம்பவங்களை இவர் கற்பனைக்கு ஈடாக மாற்றி எடுத்து கதையின் ஜீவனையே சாகடித்து விட்டார்.

உதாரணமாக நாவல்படி சேந்தன் அமுதன் தான் சோழ நாட்டின் பேரரசர்கஆக முதலில் அரியணை ஏறுவார்   பின்னாளில் தான் அருள்மொழிவர்மன் ராஜராஜ சோழனாக அரியணை ஏறுவார் என்று முடிந்திருக்கும். ஆனால் இதில் அதற்கு நேர் எதிராக மதுராந்தகனை அரியணையில் ஏற்றி  அழகு பார்த்து இருக்கிறார். 

இலவச இணைப்பாக பூங்குழலி எங்கு சென்றாள் என்று கண்டுபிடிக்காமல் படத்தில் தவற விட்டிருப்பார்.   ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்ற புதிர் அந்த பொன்னியின் செல்வன் நாவலின் கதாசிரியர் அமரர் கல்கிக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. அதை நான் படமாக எடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவரே தன் காதலியின் வாளால்  அவரை மாய்த்துக் கொள்வதாக காட்டி இருப்பது மாபெரும் அபத்தம். 

நந்தினியும் ஆதித்த கரிகாலனும் ஒன்று சேரக்கூடாது என்று குந்தவை ஏன்  பிரித்தால் என்பதற்கு நாவலில் அவர்களுக்கு அண்ணன் தங்கை முறை வருவது போல் ஒரு காட்சி அமைந்திருக்கும்.  ஆனால் இங்கு அதற்குண்டான விளக்கம் எங்குமே தரப்படவில்லை   நந்தினியை இவர் காதலித்தார் என்றே காட்டப்பட்டிருக்கிறது.  ஒரு முழு நாவலை அப்படியே படமாக எடுப்பது மிக கடினமான காரியம் தான்.  அதிலிருந்து ஒரு சிறு துண்டு பகுதியை எடுத்து படமாக்கி இருந்திருக்கலாம்.  அதற்குப் பெயர் போனவர்தான் இந்த மணிரத்தினம். சத்தியவான் சாவித்திரி கதையின் சிறு பகுதியை தான்  மௌன ராகம் என்ற பெயரில் எடுத்தார். கொடை வள்ளல் கர்ணன் மற்றும் துரியோதனனின் கதையின் சாரம்சங்களை மட்டுமே வைத்து தளபதி என்ற அற்புதமான படைப்பை கொடுத்தார். தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் கருணாநிதி அவர்களின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை சாராம்சமாக வைத்து இருவர் என்ற ஒரு காவியத்தை கொடுத்தார். இப்படி எல்லாம் வரலாற்று இதிகாசங்களை படமாக கொடுத்த மணிரத்தினத்திற்கு என்ன ஆனதோ..?  ஏது ஆனதோ..? என்று தெரியவில்லை பொன்னியின் செல்வன் நாவலை கருணை கொலை செய்தே விட்டார்.  ஒருவேளை அமரர் கல்கி இருந்திருந்தால் இந்த தவறு நடக்காமல் இருந்திருந்திருக்கலாம்.  இதை நாம் இப்படியும் சொல்லலாம், 

"நல்லவேளை அமரர் கல்கி முன்னாடியே போய் சேர்ந்துட்டாரு.. இல்லைன்னா இந்த கொடுமையெல்லாம் பாத்துட்டு அவரே கழுத்துல கல்லைக்கட்டி கிணத்துல விழுந்து செத்து இருப்பாரு". அந்த அளவுக்கு ஒரு கதையை சிறைசேதம் செய்து கருணை கொலை செய்துவிட்டார் மணிரத்தினம். மணிரத்தினம் என்ற அந்த ஒரு பெயருக்காக மட்டுமே ஐஸ்வர்யா ராய் முதல் அடிநிலை ஆர்டிஸ்ட் வரை நடிக்க வருகிறார்கள்    அவர்களுடைய நடிப்பு திறமை வீணடிக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம் போதும்.  இத்தோட நிறுத்திக்குவோம். நாங்கல்லாம் இனிமேலும் தியேட்டருக்கு வந்து படம் பாக்குறதா..  வேண்டாமா...? நீங்களே ஒரு முடிவு பண்ணிக்கோங்க..!


Rating : 2.5 / 5 கருத்துகள் இல்லை