சற்று முன்



கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் இரண்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை !


கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் இரண்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை

சென்னை, 22, டிசம்பர் 2022: ஆசியாவின் முன்னணி பலவகை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையமாக திகழும் கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (ஜி.ஜி.எச்.சி.), இரண்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது.

செக் குடியரசு நாட்டின் மருத்துவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இரண்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கர்ப்பப்பை அறுவை சிகிச்சை என்பது வளர்ச்சியடையாத நிலை அல்லது இல்லாத மாற்று கர்ப்பப்பை நிலையில் (ஹைப்போபிளாசியா) உள்ள இளம்பெண்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த

ஒரு மருத்துவ நிபுணர்கள் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மகப்பேறியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் பத்மப்ரியா விவேக் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் சவாலான வகையில் இரண்டு பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் மேற்கொண்டோம். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு 16 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. முன்னதாக கர்ப்பப்பை தானமாக வழங்கிய அவரது சகோதரியின் ரத்த வகை பொருந்தவில்லை என்பதால், பிளாஸ்மா பரிமாற்றம் செய்யப்பட்டது. மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக 3 நாள்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதேபோல ஆந்திரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 15 மணி நேரம் திறந்தநிலை கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பப்பை தானம் அளிக்கும் அவரது தாயிடம் இருந்து கர்ப்பப்பையை மீட்க 8 மணி நேரமானது என்றார்.

செக் குடியரசு நாட்டின் மருத்துவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜிரி

ஃப்ரோனெக் கூறுகையில், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது கருவுறாத பெண்களுக்கு நம்பிக்கையை விதைக்கிறது. பிறவியில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யக்கூடியது. கர்ப்பப்பை மாற்று மூலம் அறுவை சிகிச்சை இளம்பெண்கள் பேறை அடைய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். தங்களின் தாய்மைப் பொருத்தவரை கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைமுறை ஆரம்ப இந்தியாவைப் நிலையில் தான் உள்ளது. மேலும் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவக் குழுவினர் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நெறிமுறைப்படுத்துவார்கள் என்றார். நடைமுறையை நிச்சயம்

மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை நடைமுறையை செக் குடியரசு நாட்டின் டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையில் மகப்பேறியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் பத்மப்ரியா விவேக், கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் மேட்டு சீனிவாஸ் ரெட்டி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம் மற்றும் எச்.பி.பி. அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ரஜனிகாந்த் பாட்சா, எச்.பி.பி. மயக்க மருந்தியல் துறை பிரிவு தலைவர் டாக்டர் செல்வகுமார் மல்லேஸ்வரன், சிறுநீரகவியல் முதுநிலை ஆலோசகர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை டாக்டர் பி.முத்துகுமார், ரத்தகசிவு தடுப்பு முதுநிலை ஆலோசகர் டாக்டர் பொன்னி சிவபிரகாசம் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் செய்தனர். கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறுகையில், மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் புதிய நவீனத்துவ மருத்துவம் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையாகும். தமிழ்நாட்டை சேர்ந்த நோயாளிக்கு ரத்த வகை பொருந்தாத காரணத்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை நடைமுறையை என்றார். சிகிச்சை தொடங்கியுள்ளோம் கிளனிகல்ஸ் குளோபல்

ஹெல்த் சிட்டி தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் & திரு. அனுராக் யாதவ், CEO, IHH ஹெல்த் கேர் இந்தியா கூறுகையில், நாட்டில் உள்ள 5 ஆயிரம் பெண்களில், ஒரு பெண் கர்ப்பப்பை சார்ந்த குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத மலட்டுத்தன்மையால்

பாதிக்கப்படுகிறார். கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி கர்ப்பப்பை மா ற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறது.

கருத்துகள் இல்லை