சற்று முன்



Project C - விமர்சனம் !

 

ஒரு பணக்கார வீடு.. அந்த வீட்டில் வசிக்கும் பெரியவருக்கு பக்கவாதம் வந்ததால் முடங்கி கிடக்கிறார். இவருக்கு மனைவி இல்லை.. இவரது மகன் வெளிநாட்டில் வசிக்கிறார்.. இவர்கள் வீடியோ காலில் பேசுவது வழக்கம்.. 

பெரியவரைப் பார்த்துக் கொள்ள அந்த வீட்டில் ஒரு (நாயகி வசுதா) பெண் வேலை செய்கிறார்.. இவரின் வேலை சமைப்பது.. துவைப்பது..

அவரைப் பார்த்துக் கொள்ள ஒரு மற்றொரு ஆண் (நாயகன் ஸ்ரீ) வருகிறார். இவருக்கு படுத்த படுக்கையாக பேச முடியாமல் தவிக்கும் அந்த பெரியவர் ஒரு பிரபல மருந்தை கண்டுபிடித்துள்ளார் என்பதை தெரிய வருகிறது..

அந்த மாத்திரையை சாப்பிட்டால் 60 -70 வயது நபர் 40 வயது போல எனர்ஜி உள்ளவராக மாறிவிடுவார். 20 வயது நபருக்கு 2 மடங்கு எனர்ஜி கிடைக்கும் என்பதால் டிமாண்ட் ஏற்படுகிறது.

இதனையறிந்த வீட்டில் உள்ளவர்கள் என்ன திட்டம் போட்டார்கள்? இந்த ரகசியம் அறிந்த வெளியில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள்? அதுவே ப்ராஜெக்ட் சி.. படத்தின் கதை. கிளைமாக்ஸ் சீன் படத்தின் முடிவு மிக அற்புதம் வேற லெவல்.

ஸ்ரீ & வசுதா ரொமான்ஸ் செம கிக்.. வசுதாவின் வளைவு நெளிவு இளசுக்கு மஜா. ஆனால் இவர் திடீரென ஆக்சன் செய்வது வேற லெவல் ட்விஸ்ட்.. 

சாம்ஸ் நடிப்பு அற்புதம் முந்தைய படங்களில் எல்லாம் சாம்ஸ் நாம் காமெடியனாக பார்த்திருப்போம் இப்படத்தில் ஒரு வில்லனாக நெகட்டிவ் கேரக்டராக பண்ணி இருக்கிறார்.

 ராம்ஜீ… பாலாஜி வெங்கட்ராமன் ஆகியோரின் கேரக்டர் கச்சிதம்..

வித்தியாசமான கதைகளத்தோடு ஒரு வீட்டில் முழு படத்தையும் படமாக்கி உள்ளனர். முக்கியமாக போரடிக்காமல் முடித்திருப்பது சிறப்பு.

Sophomore Feature Film என்றால் ஒரு படத்திற்கு முன் கதையும் பின் கதையும் இருக்கும். இந்த கதை Chapter 2.. எனவே இந்த படத்திற்கு முதல் பாகமும் வரும் 3வது பாகமும் விரைவில் வரும்..

இயக்குனர் VNO… இசை – சிபு சுகுமாறன்… ஒளிப்பதிவு.. – சதீஷ் ஆனந்தன்.. எடிட்டர் – தினேஷ் காந்தி.. ஆகியோரின் பணிகளில் நேர்த்தி.. படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்று. எனவே அடுத்த பாகத்தை பார்க்கும் ஆவல் தூண்டுகிறது.

படத்தின் நாயகன் ஸ்ரீ- தான் படத்தின் தயாரிப்பாளர்.. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஜெனீஷ் பெற்று இருக்கிறார்.

Rating - 3.5 / 5



கருத்துகள் இல்லை