சற்று முன்



ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட 'பொன்னியின் செல்வன்' படக் குழு !


ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட 'பொன்னியின் செல்வன்' படக் குழு

இன்று ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) - சிறந்த திரைப்படம், 

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),

 சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),

 சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),

 சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்

 சிறந்த ஆடை வடிவமைப்பு

 (ஏகா லக்கானி) , 

ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. 

இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா ,

திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத், திரு. ரவி வர்மன் மற்றும் செல்வி. ஏகா லகானி ஆகியோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை