சற்று முன்குடி மகான் திரை விமர்சனம் !

 குடிக்காத ஒருவனுக்கு ஏற்படும் வியாதி. போதை வியாதி  போதை ஆகிறான். இதனால் அவனுக்கு ஏற்படும் அவமானமே படத்தின் கதை.

விஜய் சிவன் நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்துள்ளார்.

தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி.. அவரது மகன் விஜய் சிவன்.. அவரது மருமகள் சாந்தினி தமிழரசன்.. இவர்களுக்கு ஒரு குழந்தை.!

தந்தையாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி கதாபாத்திரம் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

அவருக்கு இப்படம் மிகப்பெரிய  வெற்றி என்று கூறலாம் அவர் நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். அவர் செய்யும் லூட்டிகள் மகன் மருமகள் பேத்தி இருக்கும்போதே.

இந்த வயதிலும் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சித்தி என்று கூறி வீட்டிற்கு அழைத்து வரும் காட்சி எல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறது. அவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் போன்றவை அனைத்தும் அற்புதம் நம்மை சிரிக்க வைத்துள்ளார்.

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் வேலையை செய்கிறார் நாயகன். இவருக்கு புதுவிதமான நோய் ஒன்று வருகிறது. அதாவது உடலில் கார்போஹைட்ரேட்ஸ் குறைந்து காணப்படுவதால் அது போதை ஆகிறது.. அவர் எதை சாப்பிட்டாலும் அதுவும் போதையாகவே பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

ஒருநாள் ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும்போது 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் கட்டுகளை வைக்கிறார்.. இதனால் படம் எடுப்பவர்கள் லட்சக்கணக்கில் படம் எடுக்கின்றனர்.

இது பெரும் பிரச்சனையாகவே அவரது வேலை பறிபோகிறது.. இதனையடுத்து மீண்டும் வேலை கேட்கிறார்.. நீ பணத்தை திருப்பி கொடுத்தால் வேலை தருகிறோம் என்கின்றனர் பேங்க் அதிகாரிகள்.

எனவே பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பணம் பெற முயற்சிக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது? பணம் கிடைத்ததா.? வேலை கிடைத்ததா.? நாயகனின் வியாதி குணமானதா.? என்பதே படத்தின் கதை.

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கேரக்டரில் தன்னால் முடிந்த வரை சிறப்பாக கையாண்டுள்ளார் நாயகன் விஜய் சிவன்..

சாந்தினி தமிழரசன் சாந்தமாக வந்து ஒரு இல்லத்தரசியாக தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

நமோ நாராயணன் வந்த பிறகு படம் வேறு பாதையில் வேற லெவலில் பயணிக்கிறது.. அவர் பண்ணும் லூட்டிகள் காமெடி வேற லெவல் என்று கூறலாம். குடிகார சங்கத் தலைவராக வரும் அவர் அவருடன் வரும் அல்லக்கைகளும் அட்டகாசம் செய்துள்ளனர்.

இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் பின்னணி இசை  காமெடிக்கும் கை கொடுக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு படத்தொகுப்பம் கச்சிதமாக அமைந்துள்ளது.

நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்.

படத்தை கலகலப்பாக கொடுக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.. மக்களும் கைத்தட்டி ரசிப்பதை காண முடிந்தது.

ஜூஸ் குடித்தால் எப்படி போதையாகும்.? என்ற லாஜிக் பார்க்காமல் இந்த படத்தை நாம் பார்த்தால் கண்டிப்பாக ரசிக்கலாம். ஜூஸ் குடித்தால் மது  அருந்திய போல் ஆகிவிடுவார்.

மது அருந்தினால் அவர் உடலுக்கு எவ்வளவு மது குடித்தாலும் ஒன்றுமே ஆகாது இது போன்ற காட்சிகள் நம்மை வியக்க வைக்கிறது லாஜிக் உடன் படத்தை பார்க்காமல் காமெடியாக பார்த்தால் மிக அற்புதமான திரைப்படம். 

ஆக மொத்தத்தில் இப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய காமெடி திரைப்படம் .

Rating: 4 / 5 


கருத்துகள் இல்லை