சற்று முன்



அதோமுகம் திரை விமர்சனம் !


அறிமுக   இயக்குனர்     சுனில் தேவ் இயக்கத்தில்  அதோமுகம் .

கதையின் நாயகன் மார்டின் ஊட்டியில் உள்ள ஒரு டீ எஸ்டேட்டில் மேனேஜராக வேலை செய்கிறார். இவருக்கு அப்பா அம்மா, யாரும் இல்லை லீனா என்ற அன்பான மனைவி உள்ளார். லீனாவுக்கும் அப்பா, அம்மா யாரும் இல்லை. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்கின்றனர்.

திருமண நாளுக்காக ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் மார்டினுக்கு, ஒருவரின் மூலம் ஒரு யோசனை கிடைக்கிறது, Hidden Face என்ற செயலி மூலம் லீனாவுக்கே தெரியாமல் அவரை வீடியோ எடுத்து, அதனை எடிட்டிங் செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கிறார். அந்த செயலி மூலம், லீனாவை சந்திக்க யாரோ வருவதை அறிந்த மார்ட்டின், லீனா மீது சந்தேகம் கொள்கிறார், அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…


அறிமுக நாயகனாக தோன்றும் கதாநாயகன் மிக நன்றாக நடித்துள்ளார்.

நாயகி மிக அழகாக உள்ளார் கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

சிறப்பு தோற்றத்தில் அருண்பாண்டியன் தோன்றியுள்ளார் கிளைமாக்ஸ் மிகப்பெரிய ட்விஸ்ட் என்று கூறலாம்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது

ஆக மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை