போர் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களான அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் போர் .
பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார் . மற்றும் டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த காலத்து கல்லூரி மாணவர்களுக்குள் இடையே நடக்கும் சீனியர் - ஜூனியர் பிரச்னையை படமாக எடுத்திருக்கிறார். நிச்சயமாக இப்படம் அந்த பிரச்னையை மட்டும் சார்ந்து இருக்கிறது என சொல்ல முடியாது. அர்ஜூன் தாஸ் (பிரபு) - காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவருக்குள் இடையே, சிறுவயதில் ஏற்படும் கசப்பான சம்பவத்தால் தற்போது (கல்லூரி காலத்தில்) மீண்டும் களேபரம் உண்டாவது படத்தின் ஒன் லைனர் கதையாக இருந்தாலும், இவர்களை சுற்றி பல கதாபாத்திரங்களும், அவர்களுக்கான பின்னணி கதைகளும் ஒரே கோட்டில் நகர்கிறது.
அர்ஜுன் தாஸின் ஜோடியாக டி.ஜே பானு (காயத்ரி) கல்லூரியில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேக்கும் போராளி பெண்ணாக வருகிறார். அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் சாதி பெயரை வைத்து மாணவர் ஒருவரை இழிவுபடுத்துவதை தட்டி கேட்கிறார். இவருடன் இருக்கும் நித்யஸ்ரீ(வெண்ணிலா) என்பவர், கல்லூரி பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
இதில் சத்யா என்பவரும் (அரசியல் கட்சித்தலைவர், கல்லூரி அறங்காவலரின் மகள்) அரசியல் எதிர்காலத்தை நினைத்து வாழ்ந்து வருவதால் கல்லூரி பொதுச்செயலாளர் பதவிக்கும் ஆசைப்படுகிறார். வெண்ணிலா - சத்யா ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருக்கின்றனர். முன்னாள் காதலர்களான இவர்களுக்கு பதவியால் மோதல் ஏற்படுகிறது. இதில் சாதி அரசியலும் நடக்கின்றது. இதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் மீதக் கதை.
அர்ஜுன் தாஸ் நடிப்பு சிறப்பு கதை கேட்ப மிகக் கச்சிதமாக நடித்துள்ளார்.
காளிதாஸ் இதுவரை நம்ம பார்த்திராத கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
ஒரு கல்லூரி மாணவனாகவே வாழ்ந்துள்ளார்.
அர்ஜுன் தாசுக்கும் காளிதாஸ் மோதும் காட்சிகள் இப்படத்தில் மிகப்பெரிய ஹைலைட்.
ஆங்காங்கே சில அரசியல் இருந்தாலும் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் காண்பித்துள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
டி. ஜே பானு மிக அழகாக நடித்துள்ளார்.
சஞ்சனா மிக அழகாக உள்ளார் கல்லூரி மாணவியாகவே வாழ்ந்துள்ளார்.
இக்கால கட்டத்தை 2K கிட்ஸ் வாழ்வை இப்படத்தில் காண்பித்துள்ளார் இயக்குனர்.
ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் இளைஞர்களை கவரும் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5


.jpeg)
.jpeg)
.jpeg)






கருத்துகள் இல்லை