சற்று முன்



சிக்மா திரை விமர்சனம் !



கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கும் சந்தீப் கிஷன், யூடியூப் மூலம் பணம் சம்பாதித்து பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கிறார். எதிர்பாராதவிதமாக பல ஆயிரம் கோடி டாலர்கள் இருக்கும் பெட்டகத்தின் சாவி அவரிடம் கிடைக்கிறது. அந்த சாவி மூலம் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள்தான் ‘சிக்மா’ படத்தின் கதை.

ஆக்‌ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் சந்தீப் கிஷன் சிறப்பாக நடித்திருக்கிறார். ஃபரியா அப்துல்லாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாதது ஏமாற்றம். ஷிவ் பண்டிட் வில்லனாக கவனம் ஈர்க்கிறார்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு, தமன்.எஸ்-ன் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு துணை நிற்கின்றன. ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

புதுமையான கதை இல்லை என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

மொத்தத்தில், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்றால் ரசிக்கக்கூடிய கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் ‘சிக்மா’.

Rating : 2.5 / 5 


கருத்துகள் இல்லை