சற்று முன்



டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரை விமர்சனம் !




பணத்துக்காக எதையும் செய்யும் ஆம்புலன்ஸ் டிரைவர் சூரியாக ஃபஹத் பாசில் நடித்துள்ளார். பணக்கார குழந்தையை கடத்த முயற்சிக்கும் அவர், இறந்து ஆன்மாவாக சுற்றும் சிறுமி திவ்யாவை தவறுதலாக கடத்துகிறார். தான் இறந்துவிட்டது தெரியாத திவ்யா, தனது பெற்றோரை கண்டுபிடிக்க சூரியின் உதவியை நாடுகிறார். அதன்பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

சூரி கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் தனது இயல்பான நடிப்பாலும் முகபாவனைகளாலும் கவர்கிறார். சிறுமி சாரா பாலேகரும் குழந்தைத்தனமான நடிப்பால் மனதை கவருகிறார். இருவருக்கும் இடையிலான காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக உள்ளன.

முதல் பாதியில் வரும் நகைச்சுவை, மேஜிக் மற்றும் கற்பனைக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசையும் கதைக்கு பொருத்தமாக அமைந்துள்ளன.

ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகம் குறைந்து சற்று நீளமாக செல்கிறது. இதனால் ஆங்காங்கே சலிப்பு ஏற்படுகிறது.

மொத்தத்தில், ஃபஹத் பாசிலின் சிறப்பான நடிப்பும், குழந்தைகளை கவரும் கற்பனை காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஃபேண்டஸி படம்.

Rating : 3.5 / 5 


கருத்துகள் இல்லை