சற்று முன்



12, 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள்; மாணவிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி

 



ராய்ப்பூர், சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதில், மாநில அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவ மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து செல்வது என முடிவு செய்து கடந்த மே மாதத்தில் அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. இதன்படி, 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் இன்று ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர். அதற்கு முன் அவர்கள் குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர். இதுபற்றி மாநில மந்திரி பிரேம்சாய் சிங் தெகாம் கூறும்போது, 10 மற்றும் 12-ம் வகுப்பில், முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்து செல்வோம் என முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கம் கொண்டது. அதன்படி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். ஹெலிகாப்டர் சவாரி செய்து விட்டு திரும்பிய மாணவி ஒருவர் கூறும்போது, உண்மையில் நன்றாக இருந்தது. முதன்முறையாக நாங்கள் ஹெலிகாப்டர் சவாரி செய்தோம். பிற மாணவர்களும், நன்றாக படிப்பதற்காக ஊக்கமளிக்கப்படுவார்கள். எங்களது பெற்றோர் இதனால் ஆச்சரியமடைந்தனர் என கூறியுள்ளார

கருத்துகள் இல்லை