Header Ads

சற்று முன்சென்னையில் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி 80வதுபிறந்த நாள் நிகழ்ச்சி ஆன்மீக சிடி வெளியீடு.

 
சென்னையில் கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி 80வதுபிறந்த நாள் நிகழ்ச்சி ஆன்மீக சிடி வெளியீடு, 80 இசை கலைஞர்களின் நாதபிஷேகம் Chenna, Oct10:பூஜ்யஸ்ரீ கணபதிசச்சிதானந்தஸ்வாமிஜி அவர்களின் 80வது பிறந்த தினம் சென்னையில்கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணபதிசச்சிதானந்தஸ்வாமிகளின் பாடல்கள் அடங்கிய 'பஜனை சந்திரிகா' என்ற ஆடியோ சிடி வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியம் முதல் சிடியை பெற்றுக்கொண்டார். சென்னை பஜன் மண்டலியை சேர்ந்த இசை கலைஞர்கள் இதில் பாடியுள்ளனர்.தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, பிரபலபரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், சுதா ரகுநாதன், காரைக்குடி மணி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


80வது பிறந்த நாளையொட்டி    80 கர்நாடகசங்கீத வித்வான்கள் ஒரே சமயத்தில், அவதாரபுருஷரானபரம பூஜ்யஸ்ரீ  கணபதிசச்சிதானந்த ஸ்வாமிஜி அவர்களுக்காக ‘தத்தப்ரியா’ எனும் புதிய ராகத்தில்கீர்த்தனைபாடி ‘நாதாபிஷேகம்’ நிகழ்ச்சியை நடத்தினர்.

ஸ்ரீ கணபதிசச்சிதானந்தஸ்வாமி தனது ஆசியுரையில், "குழந்தைகளை நல்ல இசையை கேட்க செய்யவேண்டும். மெல்லிய, இனிமையான இசையை கேட்கும் குழந்தை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக வளரும் என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பகவத் கீதையை படிக்கவேண்டும்.மக்களிடையேஒற்றுமையும்சகோதர பாசமும் மேலோங்க செய்ய வேண்டும். ஆன்மீகம்தழைக்க வேண்டும் அப்பொழுதுதான் அமைதி, சுபிட்சம் ஏற்படும்.

நல்ல சங்கீதத்திற்கு சகல வியாதிகளையும் நிவர்த்தி செய்யும் சக்தி உண்டு. நாதத்தில் நிம்மதியை பெற முடியும், நல்ல தூக்கத்தை வரவைக்கமுடியும். உடல் வலியை போக்க முடியும், என்றார் கணபதிசச்சிதானந்தஸ்வாமிஜி.

 அவதூத தத்த பீடத்தின்தலைமைபீடாதிபதி பரம பூஜ்யஸ்ரீ கணபதிசச்சிதானந்தஸ்வாமிஜி  அவர்கள்கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில்,ஸ்ரீ  ஜெயலெக்‌ஷ்மி மாதாவிற்கு,காவேரிக்கரையில்உடல் முழுவதும் வீபூதி, ருத்ராக்‌ஷமாலையுடன்அவதரித்தவர். 

பூஜ்யஸ்ரீ  ஸ்வாமிஜிஅவர்கள் வெறும் இசையோடு நின்றுவிடவில்லை,புராணங்களையும் இதிஹாசங்களையும் நமக்கு தனது ஆன்மீகசொற்பொழிவின்மூலம் எடுத்துரைத்து நடுவில்தனது பஜனைப் பாடல்களையும் தனதுகுரலில்பாடி அனைவரும் வாழ்வின்துன்பங்கள் துயரங்களையும் மறந்து ஆனந்தக் கண்ணீர்வடிக்கும்அளவுக்கு அந்த இசையும், சொற்பொழிவும்இருக்கும்.நல்லி குப்புஸ்வாமி பேசுகையில், "இவர்ஒருஅவதார புருஷர், ராஜ ரிஷி, யோகி,நாத யோகி, மஹாபண்டிதர்,புலமை வாய்ந்த ஆன்மீகக்கவிஞர்,‘கீபோர்டு’ இசை வித்தகர், இசைமேதை, ஆழ்ந்ததத்துவ ஞானி, ‘கிரியா யோகா’ ஆசிரியர்,இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..பூஜ்யஸ்ரீ  ஸ்வாமிஜியின்முக தேஜஸிலிருந்தே இதை நாம் தெரிந்துகொள்ளலாம். பத்ம சுப்ரமணியம் கூறுகையில் "இசை மேதையான பூஜ்யஸ்ரீ  ஸ்வாமிஜி,‘MUSICFOR HEALING’ அதாவதுஇசையின்மூலம் வியாதிகளை குணப்படுத்துதல்,கட்டுப்படுத்துதல்’ என்ற ஒரு இயற்கை ரீதியானவகையில்,அதற்கான ராகங்களை கண்டெடுத்து இசைத்துள்ளார். இதுதவிர5000 பஜனைப் பாடல்களை எழுதியபெரும் ‘வாக்யேக்காரர்’.அவற்றை, கர்நாடக இசைக்கலைஞர்கள்அனைவரும்ஒன்று சேர்ந்து கர்நாடக இசையில் அவர்இயற்றியராகங்கள் மாறாமல், சங்கீத கீர்த்தனைகளாக மாற்றியமைத்திருக்கிறார்கள்.கணபதிசச்சிதானந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ஆர் சி. உதயசங்கர்,ஸ்ரீதர் நாராயணன்,கே.எம் நரசிம்மன், வி.ஜி சுரேஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்

கருத்துகள் இல்லை