சற்று முன்



டைரி - திரை விமர்சனம்

நடிகர்கள்: அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து; ஒளிப்பதிவாளர்: அரவிந்த் சிங்; இசை: ரான் ஈதன் யோஹன்; இயக்கம்: இன்னாசி பாண்டியன்.


இந்தப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும்போது, "இயக்குனர் இன்னாசி பாண்டியன் கதையை மட்டும் வித்தியாசமாக யோசித்துவிட்டு திரைக்கதையில் தடம் புரண்டுவிட்டார்" என்று விமர்சித்திருக்கிறது தினமலர் இணையதளம்.

இந்தப் படத்தின் கதையைப் பொறுத்தவரை, "சப் - இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருப்பவர் அருள்நிதி. ஆவணக் காப்பகத்திலிருந்து முடிக்க முடியாத கேஸ்களில் ஒன்றை எடுத்து பயிற்சி பெறுபவர் விசாரிக்கலாம் எனச் சொல்கிறார் மேலதிகாரி. கண்ணை மூடிக் கொண்டு ஒரு கேஸைத் தேர்வு செய்கிறார் அருள்நிதி. ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த கொள்ளை, கொலை வழக்கு அது. அங்கு சென்று தன் விசாரணையை ஆரம்பிக்கிறார். ஒரு வழக்கை விசாரிக்கப் போய் மேலும் சில பல மர்மங்களுக்கான விடை தெரிகிறது. அவை என்ன என்பதுதான் இந்த 'டைரி'"

கருத்துகள் இல்லை