நடிகையை படுக்கை அறைக்கு அழைத்த இயக்குனர்....
அந்த காலத்தில் இருந்தே நடிகைகளுக்கு சினிமா துறையில் சில பல சங்கடங்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதிலும் இந்த காலகட்டத்தில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை அதிகமாக சந்தித்து வருகின்றனர். அதில் பொருளாதார தேவைக்காகவும், வாய்ப்புக்காகவும் சிலர் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் பல நடிகைகள் கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் இது போன்ற வாய்ப்புகளை ஏற்க மறுத்து விடுகின்றனர்.
அப்படி மறுக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும். ஆனாலும் அந்த நடிகைகள் திறமையால் மட்டுமே முன்னேற நினைத்து காத்திருப்பார்கள்.ஆனால் பிரபல நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் கடுமையான தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார்.
பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் கலக்கியவர் தான் அந்த நடிகை. பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாகவும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அம்மா, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க கமிட்டான போது அந்த இயக்குனர் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டு இருக்கிறார்.
அதில் விருப்பமில்லாத அந்த நடிகை முடியாது என்று மறுத்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த அந்த இயக்குனர் நடிகையை வேறு விதமாக பழிவாங்கி இருக்கிறார். அதாவது நடிகையின் காட்சி படமாக்கப்படும் போது மிகவும் அதிக வெளிச்சம் தரும் லைட்டை அவருடைய முதுகுக்கு பின்பக்கத்தில் வைத்து ஷூட் செய்வாராம்.
அதன் பாதிப்பால் அந்த நடிகைக்கு முதுகு பகுதியில் எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து அந்த படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். இவரைப் போன்றே பல நடிகைகளும் இது போன்ற பிரச்சனைகளை திரையுலகில் இன்னும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை