Header Ads


 

சற்று முன்



சாய் சில்க்ஸ் (கலாமந்திர்) அதன் 52 வது அங்காடி மற்றும் நான்காவது முதன்மையான காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் கடையை தமிழ்நாட்டில் திறக்கிறது !

சாய் சில்க்ஸ் (கலாமந்திர்) அதன் 52 வது அங்காடி மற்றும் நான்காவது முதன்மையான காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் வடிவமைப்பு கடையை தமிழ்நாட்டில் திறக்கிறது.

    சென்னை, டிசம்பர் 26, 2022: 2019, 2020 மற்றும் 2021 நிதியாண்டில் வருமானம் மற்றும் வரிக்குப் பிந்தைய லாபத்தின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கலாச்சார ஆடைகளின், குறிப்பாக புடவைகளின் முன்னணி சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான (டெக்னோபக்ரிப்போர்ட் படி) சாய் சில்க்ஸ் (கலாமந்திர்) லிமிடெட் (சாய் சில்க்ஸ் அல்லது SSKL), தனது  52வது கடையை  தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கியது.

"காஞ்சிபுரம் வர மஹாலக்ஷ்மி சில்க்ஸ்" என்ற பெயரில் இயங்கும் புதிய SSKL ஸ்டோர் ஆனது,  மூன்று தளங்கள் முழுவதும்  12000 சதுர அடிக்கு மேல் பரப்பளவைக் கொண்டு, சென்னை தி.நகரில் உள்ள பாண்டி பஜாரில் அமைந்துள்ளது

வர மஹாலக்ஷ்மி ஸ்டோர் தமிழ்நாட்டின் நான்காவது கடையாகும் .மற்றவை சென்னை மயிலாப்பூர் , காஞ்சிபுரம் காந்தி சாலை,  மற்றும் சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ளன. பனாரசி, படோலா, கோட்டா, காஞ்சிபுரம், பைத்தானி, ஆர்கன்சா, குப்படம் போன்ற பல்வேறு வகையான புடவைகள் உட்பட பிரீமியம் தயாரிப்புகள் மற்றும்  காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் போன்ற கைத்தறிகளில் கவனம் செலுத்தி இந்த ஸ்டோர் வழங்குகிறது.

மதிப்புமிக்க பேஷன் பொருட்கள் உட்பட பல வகையான அல்ட்ரா-பிரீமியம் மற்றும் பிரீமியம் புடவைகள் மற்றும் கலாச்சார  உடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் SSKL இன் ஸ்டோர்கள்,  இந்தியாவின் துடிப்பான கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியத்தை பரப்புவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த உயர்தர கலாச்சார  பட்டுப் புடவைகள் மற்றும் கைத்தறிகள், மற்றவற்றுடன், திருமணம் மற்றும் நிகழ்வுகளில் அணியும் உடைகளை நோக்கமாகக் கொண்டுள்ளன. வர மஹாலக்ஷ்மி புடவைகள்  தோராயமாக ரூ. 4,000 முதல் ரூ.2,50,000 வரை சில்லறை விற்பனையில் விற்கப்படுகின்றன.

சாய் சில்க்ஸின் (கலாமந்திர்) நிர்வாக இயக்குனர் திரு.நாககனக துர்கா பிரசாத் சாலவடி கூறுகையில், "வாழ்க்கையின் அனைத்து மகத்தான தருணங்களையும் பாணியாக  கொண்டாடுவதில் நாங்கள் நம்புவதால், அல்ட்ரா-பிரீமியம் மற்றும் பிரீமியம் புடவைகளை உள்ளடக்கிய எங்களது பல்வேறு வழங்கல்களுடன், சாய் சில்க்ஸ், ஒரு கலாச்சார  நாகரீக நிறுவனமாக தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எங்களின் நான்காவது காஞ்சிபுரம் வர மஹாலக்ஷ்மி சில்க்ஸ் ஸ்டோர் தமிழ்நாட்டில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்புமிக்க அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் வலிமையைக் காட்டுகிறது. இந்த புதிய ஸ்டோர் எங்களின் முழு வகையிலான பிரீமியம் பட்டுப் புடவைகள் மற்றும் காஞ்சிபுரம் புடவைகளை வழங்குகிறது." என்று கூறினார்.

திரு. சாலவாடி மேலும், “எங்கள் முயற்சியானது, அதே நகரத்தில் ஸ்டோர்களையும்  சரக்குகளையும் திறம்பட நிர்வகிப்பதற்கும், வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தியை திரள் அடிப்படையிலான உத்தியுடன்  மேம்படுத்துவது ஆகும். காஞ்சிபுரம் வர மஹாலக்ஷ்மி சில்க்ஸ் ஸ்டோர்ஸ், ஒரு தனித்துவமான அனுபவத்தையும் வாடிக்கையாளர் சேவையையும் வழங்குகிறது, இது எங்கள் சரக்கு மற்றும் நாங்கள் வழங்கும் பல்வேறு SKU களுடன் இணைந்து, வளர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் ஈர்க்கவும் தக்கவைக்கவும் எங்களுக்கு உதவுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், தென்னிந்தியா முழுவதும் எங்களின் நான்கு வடிவங்களிலும் மேலும் 25 ஸ்டோர்களைத் திறப்பது எங்களின் நோக்கமாகும்."என்று கூறினார்.


பிரபல நடிகையான ஜான்வி கபூரை சாய் சில்க்ஸ் ஸ்டோரை திறந்து வைக்க தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து நடிகை ஜான்வி கபூர் கூறுகையில், “சாய் சில்க்ஸின் நான்காவது காஞ்சிபுரம் வர மஹாலக்ஷ்மி ஸ்டோரை சென்னையில் தொடங்குவது  மிகவும் உற்சாகமாக இருக்கிறது. சாய் சில்க்ஸின் நிபுணத்துவம் மற்றும் அதிநவீன வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், பாணியாக  வெளியே சென்று வாழ்க்கையின் பொன்னான தருணங்களை அனுபவிக்க உத்வேகத்தை அளிக்கிறது. தரம், வாடிக்கையாளர் சேவை, தயாரிப்பு வகை  ஆகியவற்றில் நிறுவனத்தின் செயல்பாட்டு மையம், தனித்துவமானது மேலும் அதன் பிராண்ட் அங்கீகாரத்தை பலப்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர் விசுவாசத்தை மேம்படுத்துகிறது."என்று கூறினார்.

2011 இல் பெங்களூருவில் உள்ள சிக்பெட்டில் முதல் ஸ்டோரை  நிறுவியதன் மூலம், வர மஹாலக்ஷ்மி ரீடெய்ல் பிராண்ட் மாடல் நிறுவப்பட்டது. மே 31, 2022 நிலவரப்படி, இது பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, விஜயவாடா, நெல்லூர் மற்றும் பிற நகரங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

வர மஹாலக்ஷ்மி ஸ்டோர்கள்  மிகவும் வழக்கமான பாணியில்  அலங்கரிக்கப்பட்டுள்ளன மற்றும் காஞ்சிபுரம் கலாச்சாரத்தில் பிராண்டின் தாக்கத்தை  பிரதிபலிக்கின்றன. இது கைத்தறி புடவைத் தொழிலை நவீனமயமாக்கும் ஒரு பிராண்டாக உருவாக்கப்பட்டது மேலும்  காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் மற்றும் பிற கைத்தறி மற்றும் சந்தர்ப்பத்துக்கான புடவைகளை ஒரே இடத்தின் கீழ்  வழங்குகிறது.

சாய் சில்க்ஸ்,  கலாமந்திர், காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ், மந்திர் மற்றும் கேஎல்எம் ஃபேஷன் மால் உட்பட நான்கு வகையான ஸ்டோர் வடிவங்களைக் கொண்டுள்ளது, இதில் உயர் கலாச்சார  நாகரீகம், நடுத்தர வருமான வர்க்கத்திற்கான கலாச்சார நாகரீகம்   மற்றும் மதிப்பு-பேஷன் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வெவ்வேறு விலைப் புள்ளிகளில், சந்தையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  

 

கருத்துகள் இல்லை