சற்று முன்



ஓ மை கோஸ்ட் படம் விமர்சனம் !

 

 இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சன்னி லியோன், நடிகை தர்ஷா குப்தா, காமெடி நடிகர் சதீஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், சதீஷ், ராஜேந்திரன் என பல காமடி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் இன்று திரையரங்குளில் வெளியாகி இருக்கிறது. கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை இழுக்கும் சன்னி லியோனை போல இந்த படமும் ரசிகர்களை சுண்டி இலுத்ததா? என்பதை காணலாம் வாருங்கள்.

படத்தின் தொடக்கம் அரச காலத்தில் அனகொண்டாபுரம் என்ற பகுதி இருக்கிறது. அந்த பகுதியின் அரசியாக சன்னி லியோன் ஆட்சி செய்து வருகிறார். அந்த பகுதியில் அரசராக செய்து சன்னி லியோலின் அப்பா ஆட்சி செய்த முறையினால் ஆண்களை முற்றிலுமாக வெறுக்கிறார் சன்னி லியோன். அதனால் அந்த பகுதியில் உள்ள ஆண்களை அரண்மனைக்கு வரவைத்து அடித்து துன்புறுத்துகிறார் சன்னி லியோன். இதனால் கோவமடைந்த யோகி பாபு சூழ்ச்சி செய்து சன்னி லியோனை கொன்று விடுகிறார். இதனால் பல ஆண்டுகள் கழித்தும் அவரின் ஆவி அங்குள்ள ஆண்களை துன்புறுத்தி வருகிறது. இந்த பேயை அடக்க சென்னையில் இருந்து சதீஸ் இங்கு வந்து எப்படி சன்னி லியோனின் ஆவியை கட்டுப்படுத்துகிறார் என்பதுதான் மீதி கதை.

இப்படத்தின் முதல் பதியில் சதீஷ் உடன் நடிகர் ரமேஷ் திலக் இணைந்து பணியாற்றுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் பேயிடம் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களை அந்த பேய் பேயிடம் அழைத்து செல்கிறது. பின்னர் அந்த பேயை வைத்து பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்ச்சி செய்துள்ளனர். கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் இரண்டாவது பதியில் வருகிறார் ஆனால் அவர் செய்வது பயமுறுத்துவதாக இல்லை. பேயை விரட்ட வந்த விஜய் டிவி பாலா எதற்கு வந்தார் எதற்கு சென்றார் என்று கூட தெரியவில்லை.

காமெடி திகில் படங்கள் வரிசையில் ஓ மை கோஸ்ட் இருக்கும். 

ஆனால்  திகில்  காட்சிகள் நன்றாக இருந்தது. தவிர்த்து இசையின் மூலம் பயமுறுத்த காட்சிகளை செய்கின்றனர். ஆனால் ஓ மை கோஸ்ட் படத்தின் முதலில் கவர்ச்சி படமாகத்தான் எடுத்திருக்கின்றனர் ஆனால் படத்தின் முடிவில் பல காட்சிகளை நீக்கிவிட்டனர் அது நாற்றாகவே தெரிகிறது. சன்னி லியோன் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த விருந்து இல்லை சன்னி லியோன் இரண்டாவது பாதியில் வருவதால் ரசிகர்கள் வருத்தம்.

ஆனாலும் ரசிகர்கள் சன்னி லியோன் வரும் காட்சிகள் பார்த்து கொண்டாடுகின்றனர்.

Rating : 3.5 /5



கருத்துகள் இல்லை