சற்று முன்



வி 3 விமர்சனம் !



தமிழ் திரைப்பட உலகின் பாலியல் வம்ச கொடுமைகளை பற்றிய சம்பவங்களை வைத்து நிறைய திரைப்படங்கள் வந்திருக்கிறது. அதன் வரிசையில் 

வரலட்சுமி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகாலம் நரேன், சந்திர குமார், பொன்முடி, ஜெய் குமார், ஷீபா, மற்றும் பலர். நடித்த படம் வி 3... படத்தை இயக்கியுள்ளார் அமுதவாணன்.

ஒளிப்பதிவு :- சிவா பிரபு.

படத்தொகுப்பு :- நாகூரன்.

இசை :- ஆலன் செபாஸ்டியன்.

தயாரிப்பு :- டீம் ஏ வென்ச்சர்ஸ.

தயாரிப்பாளர்:- ஆர்.சி.எம். விஷ்னு பிரபு, தெய்வநாயகம் மகாலிங்கம், அரவிந்தன் சுந்தர்ராஜன், புகழேந்தி, சம்பத்குமார், ஆதித்தன்.

ஆனால் இந்த வி 3 திரைப்படத்தில்  விபச்சார தொழிலை சட்டமாக்க வேண்டும்  பள்ளிகளில் செக்ஸ் கல்வியை கட்டாயப்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

ஆடுகளம் நரேன், தனது இரண்டு மகள்களோடு முத்த மகள் பாவனா மற்றும் இளைய மகள் எஸ்தேர் எளிமையாக மிக சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ஒருநாள் வேலை முடிந்து இரவங நேரத்தில் தன் இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் நிலையில் வாகனம் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

இந்த நிலையில் பாவனாவை ஐந்து இளைஞர்கள் சேர்த்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள்.

இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவ, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பாவனாவிற்கு நீதி கிடைக்க மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் தலை தூக்குகிறது.

இதனால், போராட்டம் நடந்து வரும் நெருக்கடிக்கு உள்ளாகும் ஆளும் கட்சி அரசாங்கம் இந்த பாலியல் பலாத்காரம் நடந்த பாவனாவின் வழக்கை உடனடியாக முடிக்க ஆளும் கட்சி அரசாங்கம் காவல்துறைக்கு உத்தரவிடுகிறது.

இந்த பாலியல் பலாத்காரம் நடந்த பாவனா வழக்கின் மிது தனிக்கவனம் எடுத்து இந்த வழக்கை விசாரித்த காவல்துறை இணை ஆணையர் பொன்முடி அப்பாவி இளைஞர்கள் ஜந்து பேரை என்கவுண்டர் செய்து கொன்று விடுகிறார்கள்.

இநத பாவனா வழக்கை முடித்து வைக்கப்பட்டது  கொலை செய்யப்பட்ட அப்பாவி ஜந்து இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் அப்படி பட்டவர்கள் இல்லை என்று காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறை ஆய்வாளரிடம் போராடுகிறார்கள்.

எவ்வளவு போராடியும் காவல் துறையில் நீதி கிடைக்காததால் மனித உரிமைகள் ஆணையத்திற்கு எடுத்துக் செல்கிறார்கள்.

இந்த என்கவுண்டர் வழக்கை விசாரிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரியான வரலக்‌ஷ்மி சரத்குமார் நியமிக்கப்படுகிறார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த அப்பாவி இளைஞர்கள் ஜந்து பேரை என்கவுண்டர் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு கையில் எடுக்கிறார் ஐஏஎஸ் அதிகாரியான வரலக்‌ஷ்மி சரத்குமார்.

வழக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரிடம் விசாரணை நடத்துகிறார் ஐஏஎஸ் அதிகாரியான வரலக்‌ஷ்மி சரத்குமார்.

அதன்பின் இந்த என்கவுண்டரில் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்திருப்பதை கண்டு பிடிக்கிறார் ஐஏஎஸ் அதிகாரியான வரலக்‌ஷ்மி சரத்குமார்.

இறுதியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பாவனாவுக்கு நீதி கிடைத்ததா? கிடைக்க வில்லையா? என் கவுண்டரில் இறந்த ஜந்து அப்பாவி இளைஞர்களின் பெற்றோர்களுக்கு நீதி கிடைத்ததா என்பதுதான் இந்த வி 3 திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த வி 3 திரைப்படத்தில் முதன்மை காப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக வரும் சிவகாமி ஐஏஎஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

மிடுக்கான தோற்றமும் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியாக வரும் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு கொடுக்கப்பட்ட சிவகாமி ஐஏஎஸ் கதாபாத்திரத்தை மிகவும் மிடுக்காகவும் நேர்மையாகவும் நடித்திருக்கிறார்.

இந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.

தனது மகளுக்கு இப்படியான இன்னல் நடந்ததை எண்ணி அழும் காட்சிகளில் பார்ப்பவர்களையும் கண் கலங்க வைத்து விட்டார் ஆடுகளம் நரேன்.

விந்தியா கதாபாத்திரத்தில் நடித்த பாவனா மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த விந்தியா கதாபாத்திரத்தில் வேறு எந்த ஒரு நடிகையும் நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தேர் தனது கதாபாத்திரத்தை செவ்வென செய்து இருக்கிறார்.

இவர் ஏற்கனவே பாபநாசம் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்துள்ளார்.

இந்த வி 3 திரைப்படத்தில் காவல் துறை இணை ஆணையர் கதாபாத்திரத்தில் பொன்முடி மிகவும் பொருத்தமாக இருக்கிறார்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வரும் பொன்முடி மிக அருமையாக நடித்திருக்கிறார்.

எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அப்படியே கதாபாத்திரத்திற்கு என்றவாறு நடிப்பை கொடுப்பார் பொன்முடி.

ஒளிப்பதிவாளர் சிவா பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

பாவனா காம பிசாசுகளிடம் இருந்து தப்பித்து ஓடும் காட்சிகளில் கேமரா கவனம் பெறுகிறது.

இசையமைப்பாளர் ஆலன் செபஸ்டீன் இசையில், பாடல்கள் அதிக அளவில் கவனம் பெறவில்லை.

ஆலன் செபஸ்டீன் இசையில், பாடல்கள் பிண்ணனி இசை ஓகே ரகம்.

சோக கீதத்தை சற்று குறைத்திருக்கலாம். பின்னணி இசை கதையோடு பயணம் செய்திருக்கிறது.

அப்பாவி இளைஞர்கள் தேடிப் பிடித்து போலி என் கவுண்டர்கள் அரசியல் வாதிகளின் மற்றொரு முகம், அநீதி இழைக்கப்படும் பெண்களுக்கு நீதி என பல முக்கியமான பிரச்சனைகளை கையில் எடுத்து சாட்டையடி கொடுத்ததற்காக இயக்குனர் அமுதவானனுக்கு மிகப்பெரிய பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

இநத வி3 திரைப்படத்தின் மையக்கருவை மிகவும் வலுவாக கையில் எடுத்த இயக்குனர், அதை கொண்டு செல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார்.

திரைப்படத்தின் ஆரம்பிக்கும் போது டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரத்தில் இருந்து பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வரை தீர்வு என்ன என்று கேள்வி கேட்கும் இயக்குனர் கடைசியில் அவர் சொல்லும்தீர்வு தமிழக அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானதாக இருக்கிறது.

விபச்சாரத்தை அங்கீகாரத் தொழிலாக அங்கீகரித்தால் பாலியல் வன்கொடுமைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லும் இயக்குனர் இது எந்த விதத்தில் சாத்தியம் என்பதை சொல்ல மறந்து விட்டார் இயக்குனர்.

டப்பிங்கில் லிப் சிங்கில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

மொத்தத்தில் V3 தமிழ் திரைப்பட ஒரு நல்ல முயற்சி, கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Rating: 3 .5 / 5


கருத்துகள் இல்லை