சற்று முன்



காக்கைக்கூடு அரங்கில் (590) நடைபெற்ற நூல் “ வானுயர்ந்த ஆதுர சாலை !

 

 காக்கைக்கூடு அரங்கில் (590) நடைபெற்ற எனது நூல் “ வானுயர்ந்த ஆதுர சாலை” வலைப்பேச்சு படைப்பாளர்கள் அந்தணன் , பிஸ்மி, சக்திவேல் வெளியிட கவிப்பேச்சு மனுஷ்யபுத்திரன் மற்றும் அந்திமழை அசோகன் பெற்றுக் கொண்டனர்.

வாழ்த்துரை வழங்க வந்து சிறப்பு செய்த பாவையர் மலர் வான்மதி, கவி தேவகி, பேராசிரியை முனைவர். மஞ்சுளா, எழுத்தாளர் கன்னிக்கோவில்ராஜா, எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் , உரையாற்றி சிறப்பு சேர்த்தனர். 

நடிகர் நிகில், எழுத்தாளர் கவிச்சிகரம் அமுதன் தமிழ்நாடு , ஓவியர் நாணா, இளந்தமிழர் பேரவை இளந்தமிழர் இன்பராசு சு, மற்றும் நண்பர்கள் பலரும் வந்திருந்து நெகிழ்வான தருணமாக்கினர்.

உயிர்மை. காம் இணைய வழி இதழில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுத வைத்து மருத்துவர் விக்ரம்குமார் அவர்கள் அணிந்துரை மூலமாக காக்கைக் கூடு பதிப்பகம் செழியன் பதிப்பித்து இன்று வெளியாகிறது.

கிராமத்து வீடு சுற்றியுள்ள மரங்களின் பயன் அதளோடு நமக்குள்ள வாழ்க்கை அனுபவங்களை இந்த நூல் பிரதிபலிக்கிறது.

விழாவில் வந்திருந்தோர் பணம் செலுத்தி புத்தகம் வாங்கிச் சென்றது புத்தக வாசிப்பின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.

இயற்கை நமது சொத்து.

கருத்துகள் இல்லை