மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரைம் வீடியோ !
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிரைம் வீடியோ .
*ஃபார்சி இணைய தொடரிலிருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியீடு.
பிரைம் வீடியோ, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமேசான் ப்ரைம் நிறுவனம், இந்தியா முழுவதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஃபார்சி இணைய தொடரிலிருந்து விஜய் சேதுபதி கதாப்பாத்திர காணொளி வெளியிட்டுள்ளது.
ஏமாற்றுவதில் வல்லவனாக இருக்கும் ஆர்டிஸ்ட் எனும் ஷாகித் கபூர் பாத்திரத்தை துரத்தி பிடிக்கும் மைக்கேல் எனும் காவலதிகாரி பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த நாட்டிலிருந்து கள்ளநோட்டுக் கும்பலை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு காவல் அதிகாரியின் அதிரடியான வாழ்க்கையை அசத்தலாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ காட்சிகள். கள்ள நோட்டு கும்பலில் பின்னால் இருக்கும் மனுசுக் (கே கே மேனன்) மற்றும் ஆர்டிஸ்ட் ( ஷாகித் கபூர் ) இருவரையும் பிடிக்க விஜய் சேதுபதியின் காவலதிகாரி பாத்திரம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் குறும்புத்தனமான நடவடிக்கைகளை நம்மால் ரசித்து மகிழாமல் இருக்கவே முடியாது. ஆட்டம் போட வைக்கும் ஒரு அற்புதமான பின்னணி இசையோடு, கூடிய இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கும் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களுக்கும்
அவரது பிறந்த நாளில் ஒரு அற்புதமான விருந்தாக இருக்கும்.
இந்த க்ரைம் திரில்லர் தொடர் ராஜ் & டிகே ஆகியோரின் பிரத்யேகமான நகைச்சுவையுடன் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. கொண்டது. பணாக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் சிஸ்டத்தை ஏழ்மை பின்னணியில் வாழும் இளைஞன் தன் சாமார்த்தியத்தால் எப்படி ஏமாற்றுகிறான் என்பதை அவனது பார்வையில் சொல்கிறது எட்டு எபிசோட்கள் கொண்ட ஃபார்ஸி தொடர்.
இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடர் பிப்ரவரி 10 அன்று இந்தியா மற்றும் உலகமெங்கும் 240 நாடுகளில் வெளியிடப்படுகிறது .
கருத்துகள் இல்லை