சற்று முன்



வசந்த முல்லை திரை விமர்சனம் !

 

பாபி சிம்ஹா நடிப்பில் வசந்த முல்லை.

சிம்ஹா, கஸ்மீரா பர்தேசி, ஆர்யா, சரத் பாபு, கொச்சு பிரேமன், ரமா பிரபா, தீபக் பரமேஸ், மோகன், கீரீஸ் நாயர், மோனா,மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு ஐடி நிறுவனத்தில் கதாநாயகன் சிம்ஹா புராஜெக்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.


இன்றைய காலகட்டத்தில் படித்து விட்டு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் ஐ.டி. உலகத்தில் கை நிறைய சம்பாதித்தாலும் மறுபக்கம் ஒரு நிம்மதியான, உறக்கமில்லாமல் கஷ்டப்பட்டுக் வாழ்க்கையையும் இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குறுகிய காலத்தில் தன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் பல இளைஞர்களிடம் இருந்து வருகிறது.

தங்களுடைய உடல் நிலையும் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவலைப் படாமல், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்காமல் எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இந்த காலத்தில் இப்படிப்பட்ட இளைஞர்களுக்கான ஒரு திரைப்படம்தான் இந்த வசந்தம் இல்லை அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும்.

இவரது நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய புராஜெக்ட் வருகிறது.

இதை குறைந்த நாட்களில் முடித்து தருமாறு கேட்கின்றனர்.

இதற்கான பொறுப்பை  சிம்ஹா ஏற்றுக் கொண்டு வேலை செய்கிறார்.

அந்த ப்ராஜெக்ட்டை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் தூக்கமே இல்லாமல் இதற்காக கடினமாக வேலை பார்த்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் இந்த தூக்கமின்மை அவருக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதையடுத்து இவரை பரிசோதித்த மருத்துவர் கண்டிப்பாக ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

பிறகு மருத்துவர் ருத்ரனை வெளியே எங்கேயாவது சென்றுவர சொல்கிறார்,

 சிம்ஹா மற்றும் அவருடைய மனைவி கதாநாயகி கஸ்மீரா பர்தேசி இருவரும் வெளியூர் செல்கின்றனர்.

கஷ்மீரா பர்தேசி செல்லும் வழியில் ஏதோ ஒன்றை காரில் இடித்து விடுவதால் மனக்குழப்பத்தில் ஓய்வெடுக்க செல்லும் வழியில் ஒரு ஓட்டலில் இருவரும் அறை எடுத்து  தங்குகிறார்கள்.

அப்பொழுது கதாநாயகி கஷ்மீரா பர்தேசிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட  சிம்ஹா உடனே மருந்து வாங்குவதற்காக கார் எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார்.

 சிம்ஹா திரும்பி வந்து பார்க்கும் போது அவர்கள் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லை.

அவருடைய மனைவி  கஷ்மீரா பர்தேசியை காணவில்லை

சிம்ஹா இந்த அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.

இறுதியில் ஏன் இவ்வாறு நடக்கிறது?  கஷ்மீரா பர்தேசி என்ன ஆனார்? தனது மனைவி கஷ்மீரா பர்தேசியை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த வசந்த முல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.

சிம்ஹா தூக்கம் தொலைத்து, டைம் லூப்பில் சிக்கி, அதில் இருந்து விடுபட போராடும் கதாநாயகனாக, அந்தக் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார் சிம்ஹா. 

டைம் லூப்பில் அவர் சிக்கி தவிக்கும் காட்சிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன அடுத்து என்ன  சுவாரசியத்துடன்  நம்மை. மிக அற்புதமாக நடித்துள்ளார் .

கதாநாயகி கஷ்மீரா பர்தேசி காதல் காட்சிகளில் கவனிக்க வைக்கும் மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதை முழுவதும் பயணிக்கும் கதாநாயகி கதாபாத்திரத்தில் காஷ்மீரா பர்தேசி.

சிறப்பான தோற்றத்தில் ஆர்யா தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக கவனிக்க வைத்துள்ளார்.

கதாநாயகன் மற்றும் கதாநாயகி சுற்றியே பெரும்பாலும் கதை நகர்வதால், அங்கங்கு வந்து போகும் நடிகர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் கேட்கும் ரகம்.

ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட் & முத்ரா’ஸ் ஃபிலிம் ஃபேக்டரி.

தயாரிப்பாளர் :- ரஜனி தல்லூரி, 

ரேஷ்மி சிம்ஹா.

அறிமுக இயக்குனரான ரமணன் புருஷோத்தமா தனது முதல் திரைப்படத்திலேயே திரைப்பட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஆங்கிலப் திரைப்படத்தை நினைவு கூறும் விதமாக உள்ள இந்த திரைப்படத்தை டைம் லூப் கதையாக கொண்டு சென்று இறுதியில் அனைவரும் எதிர்பார்க்காத விதமாக சுவாரஸ்சியமாக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா முடித்துள்ளார்.

மொத்தத்தில் வசந்த முல்லை – திரைப்படம் ரசிகர்கள் மனதில் மலர்கிறது.

Rating 3.5 / 5



கருத்துகள் இல்லை