சற்று முன்



ரன் பேபி ரன்” திரை விமர்சனம் !

 

இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் “ரன் பேபி ரன்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி இப்படத்தில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா, இஷா ஸ்மிருதி மற்றும் அதன் இயக்குனர் என பலரும் நடித்திருகின்றனர்.

ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய வழக்கமான கதையை தேர்வு செய்யும் முறையில் இருந்து மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா காரில் தெரியாமல் ஏறி உதவி கேட்கிறார். அப்படி உதவி செய்யும் பாலாஜி ஒரு மீட்டிங் முடிந்ததும் தூங்கி விடுகிறார். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது வீட்டில் பிணமாக கிடக்கிறார். இப்படி பிணமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சடலத்தை ஆர்.ஜே. பாலாஜி என்ன செய்தார். அவர் ஏன் இறந்தார் என்பதை கண்டுபிடித்தாரா? இந்த பிரச்னையில் இருந்து ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் வந்தாரா? என்பதுதான் மீதி கதை.

தன்னுடைய பொதுவான நடிக்கும் பாணியில் இருந்து கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜியின் முகம் இப்படத்திற்கு சரியாக உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு என்ன தேவையோ மற்ற செய்திருக்கின்றனர்.

இப்படத்தில் கதாநாயகிகளாக வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், ஸ்மிருதி வெங்கட், இஷா தல்வார் போன்றவர்கள் மூன்று நிமிடத்திற்கு மேலே படத்தில் இடம் பெறவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சில இடம் வசனங்களாவது கிடைத்து மற்றவர்களுக்கு அதுவும் கிடையாது. தொடக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரில் காரில் ஏறும் போது அலறிய பாலாஜி, அவரை பிணமாக கொண்டு செல்லும் போது அமைதியாக இருக்கிறார். 

அந்த வண்டியின் டிரைவரும் சாதாரணமாக ஓட்டுகிறார். இது உண்மை தன்மையை குறைக்கிறது.அதேபோல படத்தில் ட்விஸ்ட என்ன என்பதை  கணிக்க முடியவில்லை. இசையமைப்பாளர் படத்திற்கு வலுவூட்ட கணிக்க இசையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இன்னும் பதட்டமாக இருந்திருந்தால் கதைக்கு கொஞ்சம் உயிரூட்டி இருக்கும்

மேலும் இதில் டி.எஸ்.பியாக வரும் தமிழ் இந்த மர்மத்தை கண்டறிவார் என  பார்த்தாள் கதையில் திடீர் ஜேம்ஸ் பாண்டாக மாறும் ஆர்.ஜே.பாலாஜி உண்மையை கண்டறிகிறார். ஆர் ஜே பாலாஜி படும் போராட்டம் பல பல ஒரு துப்பறிவாளன் போல் அவர் போராடி கண்டுபிடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் கல்லூரி மாணவி என்பதை கண்டறிந்து  ஹாஸ்டல் ரூம் அவள்  தங்கி இருக்கும் விடுதி அனைத்தும் தேடுகிறார் அனைத்தையும் கண்டறிந்து  கண்டுபிடித்து உண்மையை சேகரிக்கிறார் ஆர் ஜெ பாலாஜி கடைசியாக மாறும் கிளைமாக்ஸ்ல் மட்டும் கதையில் சொல்ல வந்த கருத்தை சொல்லி இருக்கிறது. மொத்தத்தில் இப்படம் 2 மணிநேரம் 10 நிமிடம் நேரம் போவது கூட தெரியவில்லை ரன் பேபி ரன் நம்மை ரன்னாக கொண்டு போய் சென்றது.

ஆர் ஜே பாலாஜி புதிய முயற்சி புதுப்பரிவானம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாம் பல கோணங்களில் பார்த்திருந்தாலும் கேரக்டரில் இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கு ஒரு பாராட்டுக்கூடிய படமாக அமைந்துள்ளது.

Rating : 3.5 / 5



.

கருத்துகள் இல்லை