கருமேகங்கள் கலைகின்றன"பற்றி இயக்குநர் தங்கர் பச்சான் !
"கருமேகங்கள் கலைகின்றன" !
அதிதி பாலன் கதாபாத்திரமான கண்மணி பாத்திரம் பற்றி இயக்குநர் தங்கர் பச்சான் :
‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் ஒரு முதன்மைப் பாத்திரத்திற்காக நிறைய நடிகைகளைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட ‘கண்மணி’ எனும் பாத்திரத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். அருவி படத்தின் ‘அருவி’ பாத்திரத்தை எவ்வாறு மறக்க இயலாதோ, அதைவிடக் கூடுதலான தாக்கத்தை இப்பாத்திரம் இவருக்கு ஏற்படுத்தும்.
ஓரிடத்தில் கூட மிகையான நடிப்பு வெளிப்பட்டுவிட்டால் படத்தின் கருவிற்கு களங்கம் ஏற்படக்கூடும் எனும் எச்சரிக்கை உணர்விலேயே ‘கண்மணி’ பாத்திரத்தைப் படமாக்கினேன். என்னுடைய நம்பிக்கையை நூறு விழுக்காடு நிறைவு செய்திருக்கின்றார் அதிதி பாலன். தான் ஏற்ற பாத்திரத்திற்கு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகள் மிக அரிதாகவே உள்ளனர். ‘தென் இந்தியாவின் நந்திதா தாஸ் இவர்’ என எனது அனுபவத்தில் உணர்கிறேன்.
இப்படத்தைக் காணும் அனைவரையும் கலங்கடித்து மீளாத தாக்கத்தை உருவாக்கும் இந்த கண்மணி பாத்திரம் இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணையாக அமையும் என்பதை உறுதியிட்டுக் கூறுகிறேன்.
இப்படத்தின் முதல் பார்வை ( first look )
வருகிற திங்கள் அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் - வைரமுத்து இணைந்து 5பாடல்களை கொடுத்துள்ளனர்.
Cast :-
Bharathi Raja
Aditi Balan
Gowtham Vasudev Menon
Yogi Babu
Mahana sanjeevi
SA Chandra Sekhar
RV Udhya Kumar
Prymid Natrajan
Delhi Ganeshan
Technicans :-
Director: Thangar Bachan
Music: GV.Prakash
Lyrics: Vairamuthu
Cinematographer: N.K.Ekhambaram
Editing: B.Lenin
Art director:Michael
Set Design: Muthuraj
Executive Producer: Varagan
Marketing & Promotions :
Movie Bond Digital
PRO : Johnson
Production: VAU media entertainment
Producer: D.Veerasakthi.
கருத்துகள் இல்லை