Header Ads

சற்று முன்ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், இளம் சாதனையாளர்களுக்கு சூப்பர் கிட்ஸ் 2023 விருது வழங்கி கெளரவித்தது !


ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், இளம் சாதனையாளர்களுக்கு சூப்பர் கிட்ஸ் 2023 விருது வழங்கி கெளரவித்தது !

தமிழ்நாட்டின் தனிச்சிறப்புடைய குழந்தைகளின் திறமை மற்றும் சாதனைகளை கொண்டாடுகிறது.

சூப்பர்கிட்ஸ் 2023 விருதினை, குகேஷ் டி - செஸ், லிடியன் நாதஸ்வரம் - இசை, வினிஷா உமாசங்கர் - அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, பிரசித்தி சிங் - சுற்றுச்சூழல் மற்றும் கே ப்ரிஷா - யோகாவிற்காக பெற்றுக்கொண்டார்கள். 

சென்னை, மார்ச் 9, 2023: தமிழ்நாடு என்றுமே தலைசிறந்த திறமைசாலிகளை உருவாக்குவதில் பெயர்போனது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தங்கள் அசாதாரண திறமை மற்றும் மன உறுதியால் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.  இத்தகைய திறமையைக் கொண்டாடும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள தனிச்சிறப்புடைய இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சியே, ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் ‘சூப்பர்கிட்ஸ் விருது 2023’.

ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் ‘சூப்பர்கிட்ஸ் விருது 2023’ விழா, ITC கிராண்ட் சோழாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  பிராண்ட் எண்டோர்சர் திருமதி. சினேகா பிரசன்னா மற்றும் ITC லிமிடெட் உணவுப் பிரிவின் பிஸ்கட் & கேக்ஸ் க்ளஸ்டருடைய தலைமை இயக்கு அதிகாரி திரு. அலி ஹாரிஸ் ஷேர் ஆகியோர் அந்தந்த துறைகளின் சாதனையாளர்களுக்கு கோப்பைகளை வழங்கினர்.

‘சூப்பர்கிட்ஸ் 2023’ பல்வேறு துறைகளில் தங்கள் சாதனைகளால் மாநிலம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்த இளம் சாதனையாளர்களை கெளரவித்தது. வரலாற்றிலே மிகவும் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவராக அறியப்படும் குகேஷ் டி அங்கீகரிக்கப்பட்டார். அவர் தனது 12-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். கடந்த ஆண்டில் குகேஷ் 2700 ELO-ரேட்டிங் மார்க்கை முறியடித்த ஆறாவது இந்தியர் ஆனார். இவர் சமீபத்தில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. லிடியன் நாதஸ்வரம், 20-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரு நட்சத்திர இசைக்கலைஞர். அவர்  CBS- இன் The World’s Best போட்டி சீசன் 1-இல் உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். 

வினிஷா உமாசங்கர், ஒரு கலைஞர், TEDx பேச்சாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். அவர் தனது கண்டுபிடிப்பான, சோலார் அயர்னிங் கார்ட் மூலம் நன்கு அறியப்பட்டவர். கிளாஸ்கோவில் நடந்த UN காலநிலை மாற்ற மாநாடு COP26-இல் பேசியுள்ளார். பிரசித்தி சிங், ஒரு சமூக தொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரசித்தி வன அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். இவர் 10 வயதிலேயே, பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற்றவர். டாக்டர் ப்ரிஷா கே, மத்திய அரசின் NCPCR சான்று பெற்ற, பார்வையற்றோருக்கான இளம் யோகா ஆசிரியர். 70 உலக சாதனைகளைப் படைத்தவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர் மற்றும் யோகா தெரபியின் இளவயது எழுத்தாளர் போன்ற பல பட்டங்களை வென்ற சிறப்பு இவரை சேரும்

விழாவில் பேசிய ITC லிமிடெட் உணவுப் பிரிவின் பிஸ்கட்ஸ் & கேக்ஸ் க்ளஸ்டருடைய தலைமை இயக்கு அதிகாரி திரு. அலி ஹாரிஸ் ஷேர், "குழந்தைகளுக்கு பலதரப்பட்ட துறைகளை வெளிப்படுத்துவது முக்கியம், பின்னர் அவர்களின் ஆர்வத்தை அடையாளம் கண்டு அவர்களின் வேட்கையை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் வளரவும் சிறந்து விளங்கவும் பலமான அடித்தளம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ‘ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் சூப்பர்கிட்ஸ் விருது’-இன் மூலம், குழந்தைகளின் சாதனை முயற்சியில் ஒரு பங்குதாரராக எங்கள் பயணத்தை தொடங்குகிறோம். பெரிய கனவுகளைக் காணவும், அவற்றை வேட்கையுடன் பின்தொடரவும் குழந்தைகளை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். எங்கள் முனைப்பு, குழந்தைகளை அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், கனவுகளை தொடரவும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரபல நடிகரும், பிராண்ட் எண்டோர்சருமான சினேகா, “ITC மற்றும் சன்ஃபீஸ்டுடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவரின் பலத்தை வளர்ப்பதும், அதில் நம்பிக்கை வைப்பதும் மிகவும் முக்கியம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பெரியதோ சிறியதோ, சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் ‘சூப்பர்கிட்ஸ் விருது’ என்பது சாதனையாளர்களை அவர்களின் திறமை மற்றும் முயற்சிக்காக அங்கீகரிக்கும் ஒரு சிறந்த தளமாகும். இது குழந்தைகளுக்கு அவர்களின் திறமைகளை மேம்படுத்த ஊக்கமளிக்கும் தளமாகவும் செயல்படுகிறது" என்றார்.

இந்த நிகழ்வின் போது, சாதனையாளர்கள் தங்கள் சாதனைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை வழங்கப்பட்டது. அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் கனவுகளைத் தொடர என்ன தேவைபட்டது என்பதைப் பற்றி ஆர்வத்துடன் பேசினர். வெற்றியை அடைவதில் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் வளர்ச்சி மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விருது பெற்றவர்கள் எடுத்துரைத்தனர். அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கிய பெற்றோர்களின் சிறந்த வளர்ப்பை சூப்பர்கிட்ஸ் சுட்டிக்காட்டினர்.

சிறந்த குழந்தைகளுக்கான சூப்பர்கிட்ஸ் கோப்பை, அவர்களின் சிறப்பான திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கான அடையாளமாக வழங்கப்பட்டது. சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் மேலும் பல இளம் சாதனையாளர்களை அவர்களின் கனவுகளைத் தொடரவும் மகத்துவத்தை அடையவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறது.


கருத்துகள் இல்லை