சற்று முன்



ரிப்பப்பரி திரை விமர்சனம் !



மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ரிப்பப்பரி

AK the talesman நிறுவனத்தின் சார்பின் இயக்குனர் ந.அருண் கார்த்திக் இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ரிப்பப்பரி. இப்படத்தில் அதிகம் குழந்த்ஸி நட்சத்திரமாகவே நாம் பார்த்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் முற்றிலும் வித்தியாசமான காமெடி ஹாரர் படமாக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் தியாகராஜன் இசையமைக்க திளைப்பது ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள தலைக்கரை என்ற கிராமத்தில் ஜாதியை மீறி திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடும் ஆண்களை பேய் கொல்வதில் படம் தொடங்குகிறது. கதை விரிவடையும் போது, ​​​​பேய் ஒரு சாதிய தீய உருவம் என்று நமக்குத் தெரியும். எனவே அந்த பேய் பற்றி தெரிந்து கொள்ள இன்ஸ்பெக்டர் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவர்களது நண்பர்களை அங்கே அனுப்புகிறார். இவர்கள் அந்த ஆவியை இறந்த போலீஸ் நாயின் ஆவியுடன் கூடிய குரங்கு பொம்மையைப் பயன்படுத்தி அதைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இளைஞர்களில் ஒருவரான சத்யராஜ் அந்த பேய் தன்னுடைய காதலியின் சகோதரர் என்பதனை கண்டறிகிறார். இதனையடுத்து தான் அடித்த இலக்காக இருக்கலாம் என்று கதை இவரை சுற்றி செல்கிறது. இறுதியில் இவர்கள் பேயை பிடித்தார்களா? அல்லது பேயிடம் இவர்கள் மாட்டுக்கொண்டார்களா என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது.

படத்தி பற்றி பார்த்தோம் என்றால் காமெடி என்ற பெயரில் அதிகம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக அணைத்து நடிகர்கள் மத்தியிலும் செயற்கை தனம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதே போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை. அது ஒன்று குறையாக அமைந்துள்ளது படத்திற்கு.

என்னதான் படமாக இருந்தாலும் லாஜிக் குறைபாடுகள் அதிகமாகவே இருக்கிறது. அவற்றினை போலவே படத்தின் கதையும் நம்பிக்தன்மை இல்லாமல் இருக்கிறது.

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பு பிரமாதம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.

இயக்குனர் திரைக்கதையை இயக்குவதில் கொஞ்சம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார். ஆனால் பின்னணி இசையில் தன்னுடைய முந்தய படங்களை விட இசையமைப்பாளர் தியாகராஜன் இசையின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.  ஆனால் இப்படத்தின் வேலை செய்த கலை இயக்குனர் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.

இந்த பேய் படம் குழந்தைகளுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் திரைப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3 / 5 


கருத்துகள் இல்லை