சற்று முன்ரேசர் திரை விமர்சனம் !

 

ஹஸ்ட்லர்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிக்க, அகில் சந்தோஷ் , பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ்  லாவண்யா, ஆறுபாலா,  சுப்பிரமணியம், பார்வதி, சரத்,   நிர்மல், சதீஷ், அரவிந்த், அனீஸ் நடிப்பில்  சாட்ஸ் ரெக்ஸ் எனப்படும் சதீஷ் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் படம் .

சிறு வயதில் இருந்து ஒருவனுக்கு பைக் ஓட்ட வேண்டும் ரேசர் ஆக வேண்டும் என்று ஆசை.. ஆனால் அவன் தந்தைக்கோ ஒற்றைப் பிள்ளையான மகனை,  எப்போது வேண்டுமானாலும் விபத்து, ஊனம் மற்றும் ,  உயிர் போகும் ஆபத்து உள்ள அந்தப் பாதையில் பயணிக்க வைக்க விருப்பம் இல்லை. மகன் நன்றாக படித்து நல்ல வேலைக்குப் போய் கல்யாணம் பண்ணி பிள்ளை பெற்றுக் கொடுக்க வேண்டும் . பேரனைக் கொஞ்சியபடி நிம்மதியாக வாழ வேண்டும் என்பது  அவரது ஆசை. 

பையன் இளைஞனாக வளர்ந்த பின்பும் (அகில் சந்தோஷ்) அப்பாவிடம் மல்லுக்கட்ட, அப்பா மறுக்க, வேலைக்குப் போய் சம்பாதித்து, அண்ணன் போல பழகும் மெக்கானிக் , ஒரு ரேஸ் கோச் இவர்கள் உதவியோடு, அப்பாவுக்குத் தெரியாமல் பைக் வாங்கி, ஆரம்பத்தில் தெருரேஸ் களுக்குப் போய் அங்கு சில பகைகளையும் பிறகு ஒரு விபத்தையும் எதிர்கொண்டு  வென்று தப்பித்து அடுத்த கட்டமாக நெறிப்படுத்தப்பட்ட ரேஸ்களை நோக்கி முன்னேறுகிறான் . 

இடையில் ஒரு பெண்ணோடு ( லாவண்யா) காதல். 

ஒரு நிலையில் ஈடுபடும் போட்டிகளில் எல்லாம் வெல்ல, அப்பாவும் தனது கனவுகளுக்கான திட்டங்களில் தீவிரமாக இருக்க, ரேசை விட்டு விடலாமா தொடரலாமா என்ற குழப்பத்தில் அவன் இருக்க,காதலி உனக்கு எது விருப்பமோ அதை செய் என்று சொல்ல,

அவன் அப்பாவுக்குத் தெரியாமல் அந்த ரேசுக்குப் போக, பகையும் ரேசில் கலந்து கொள்ள, இவன் கலந்து கொள்ளும் விசயமும் இத்தனை நாளாக தன்னை ஏமாற்றிய விசயமும் அப்பாவுக்குத் தெரிய வர…. என்ன நடந்தது என்பதே இந்த ரேசர். 

அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரு பாசப் போர் என்று கூறலாம்.

காட்சிகளை வித்தியாசமாக சொல்ல முயன்று இருக்கிறார் இயக்குனர்.  வசனம் பல இடங்களில் நன்றாக இருக்கிறது ,  காமெடி சில பல இடங்களில் சிறப்பாக  இருக்கிறது. ரேஸ் காட்சிகளை நன்றாக எடுத்து இருகின்றனர். இயக்குனரும் சீனு ரெக்ஸ் என்பவரும் சேர்ந்து அமைத்திருக்கும் ஸ்டன்ட் காட்சிகள் சிறப்பு.  பைக் ரேஸ் பற்றிய விவரணைகள் அருமை. ரேஸ் காட்சிகள் ஸ்டண்ட் அனைத்தும் அற்புதம்.

அகில் சந்தோஷ் கேரக்டருக்கு பொருத்தமாக அழகாக இருக்கிறார். அற்புதமாக நடித்துள்ளார் காட்சிக்கேற்ற நடிப்புதான் மிக மிக நன்றாக நடித்துள்ளார். 

சின்னத்திரையின் ஏஞ்சல் விஜய் டிவி புகழ் லாவண்யா கதாநாயகி யாக நடித்துள்ளார் . இப்படத்திற்கு லாவண்யா பக்க பலம் ஆக அமைந்துள்ளார். லாவண்யாவின் நடிப்பு பிரமாதம் ரொமான்ஸ் அனைத்தும் அசத்தியுள்ளார்.

அனைவரும் அறிந்த பெண் தன் குடும்பத்தில் ஒரு பெண்ணாக பார்க்கும் மக்கள் சின்னத்திரையின் கனவு கன்னி லாவண்யா என்று கூறலாம். இது கூடுதல் பலம்இப்படத்திற்கு.  அழகாக இருக்கிறார்.

டி வி சீரியல் பாணியிலேயே ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போயிருக்கிறார் . நாயகனின் அலுவலக நண்பர்களாக வருபவர் (சரத்?) ரசிக்க வைக்கிறார் . சரத்தின் நடிப்பு அற்புதம் .

ஆறுபாலா, சுப்பிரமணி  நடிப்பு பிரமாதம்.  கதைக்கு ஏற்ப  நடிகர் நடிகை தேர்வு அருமை . இயக்குனருக்கு பாராட்டுகள். 

அதே நேரம் சில காட்சிகளை சீரியசாக கொண்டு சென்று உள்ளனர்.  ரேஸ் காட்சிகளில்  நன்றாக இருந்தது ஆனாலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

காதல் காட்சிகள் நன்றாக உள்ளது. 

 நாயகனும் நாயகியும் சேர்ந்து டிராவல் லாக் ஆரம்பிப்பதாக சொல்கிறார்கள். அது என்ன ஆச்சு என்று அப்புறம் சொல்லவே இல்லை . இது ஒன்று இப்படத்தில் குறை.

பின்னணி இசை இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ஆரம்பம் முதல்  இடைவேளை வரை நன்றாக இருந்தது. கிளைமாக்ஸ்  எந்த பாதிப்பையும் ஏற்படுத்தமலே படம் தொடங்கி பயணித்து முடிந்தும்  விடுகிறது . கிளைமாக்ஸ் அற்புதமாக காட்சி அமைத்துள்ளார் இயக்குனர்.  

படத்தில் முதல் முயற்சியைத் தவிர எல்லா ரேஸ்களிலும் ஹீரோ முதலாவதாக வருகிறார் . அது ஒன்றுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயற்கையாக ஆரம்பம் முதல் ஒரு இரண்டு மூன்று தோல்வி கண்டு முயற்சித்து வருவது நாம் எப்பொழுதும் காண்பது காட்சிகள் அனைத்து சினிமாக்களிலும் இப்படத்தில் முதல் ரேஸ் தவிர மற்ற அனைத்து  ரேசிலும் செல்லும் ஹீரோ முதலாவதாக வருகிறார். 

இது ஒன்றுதான் குறை.

 திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் ஒலிப்பதிவு பிரமாதம். இருந்தால் படமும் இந்த வார படங்களின் ரேசில் முதல் இடத்தில் வந்தடையும்.

ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் பார்க்கக் கூடிய படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படம் ரேசர். ரேசர் இந்த வாரம் ரேசில் வந்தான் வென்றான்.


Rating : 4 / 5 


கருத்துகள் இல்லை