சற்று முன்அவள் பெயர் ரஜ்னி” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !


அவள் பெயர் ரஜ்னி” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில்  “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை,  நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார் !!! 

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர ரஜ்னி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார். 

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் இதுவாகும். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும்,  துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான கச்சிதமான போஸ்டராக ஆவலை தூண்டும் வகையில் இப்போஸ்டர் அமைந்துள்ளது. 

சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது.  விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் வெளியாகும். 

எழுத்து இயக்கம் : வினில் ஸ்கரியா வர்கீஸ் 

தயாரிப்பு :  ஸ்ரீஜித் K.S மற்றும் பிளெஸ்ஸி ஸ்ரீஜித் 

ஒளிப்பதிவு : RR விஷ்ணு 

இசை : 4 மியூசிக்ஸ்  

எடிட்டர்: தீபு ஜோசப் 

வசனங்கள்: வின்சென்ட் வடக்கன், டேவிட் K ராஜன் 

கலை இயக்குனர்: ஆஷிக் S

கிரியேட்டிவ் டைரக்டர்: ஸ்ரீஜித் கோடோத் 

ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர் 

ஆடை வடிவமைப்பாளர்: தன்யா பாலகிருஷ்ணன் 

ஸ்டண்ட்: ஆக்‌ஷன் நூர், K கணேஷ் குமார், அஷரஃப் குருக்கள்

புரடக்சன் கண்ட்ரோளர் : ஜாவேத் செம்பு 

முதன்மை இணை இயக்குநர்கள்: வினோத் PM, விஷக் R வாரியர் 

இணை தயாரிப்பாளர்: அபிஜித் S நாயர் 

தயாரிப்பு நிர்வாகி:  K சக்திவேல் 

ஒலி வடிவமைப்பாளர்: ரெங்கநாத் ரவி 

DI : ரமேஷ் C P  

ஸ்டில்ஸ்: ராகுல் ராஜ் R 

புரமோஷன் ஸ்டில்ஸ் : ஷஃபி ஷக்கீர் 

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM) 

டிஜிட்டல்: ரஞ்சித் M

டிசைன்ஸ்: 100 டேஸ்


கருத்துகள் இல்லை