சிறுவன் சாமுவேல் திரை விமர்சனம் !
குழந்தைகளுக்கான படம் என்றால் பெரியவர்கள் குழந்தைகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தவிர்த்து குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அவர்களின் உலகத்திற்கே சென்று பார்க்கும் விதம் தான் சிறுவன் சாமுவேல்.
ஆனால் குழந்தைகளுக்கான படம் எடுப்பது மிகவும் அரிதாகத்தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘சாது ஃபெர்லிங்டன்’ இயக்கியிருக்கும் இந்தப் படம் முற்றிலும் சிறுவர்களுக்கான படம் என்று கூறலாம்.
அந்த வகையில் சாமுவேல் என்ற சிறுவனின் ஒரு காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட படம் இது. நல்லது எது, கெட்டது எது என்று இனம் புரியாத பருவ தொடக்கத்தில் இருக்கும் சாமுவேல் என்ற சிறுவன் தன் மனசாட்சியை முதன் முதலாகக் உணரும் நிகழ்வுதான் இந்தப் படத்தின் கரு.
சாமுவேலுக்கு பள்ளி தொடங்கி வெளியிலும் விளையாட்டுத் தோழனாக இருக்கிறான் ராஜேஷ். இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். சொற்ப வருமானத்தில் இருக்கும் இவர்களது தந்தைமார்கள் பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தர முடியாத சூழலில் இருக்கிறார்கள். அத்துடன் குடும்ப கஷ்டத்தையும் உணர்த்தி மற்றும் கண்டிப்புடனும் அவர்களை வளர்க்கிறார்கள்.
இவர்களெல்லாம் தென்னை மட்டை மற்றும் மரத்தில் அறுத்து மட்டைகளை செய்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, பணக்காரச் சிறுவன் ஒருவன் நிஜ கிரிக்கெட் மட்டையைக் கொண்டு வர இவர்களுக்கும் அப்படி ஒரு கிரிக்கெட் மட்டை வாங்கி விட ஆர்வம் வருகிறது.
கிரிக்கெட் வீரர்களின் உருவம் பொறித்த அட்டைகளை நூற்றுக்கணக்கில் சேகரித்து கொடுத்தால் சச்சின் டெண்டுல்கர் கையெழுத்து போட்ட கிரிக்கெட் மட்டை கிடைக்கும் என்று சாமுவேல் பயணம் செய்யும் பள்ளி வேன் டிரைவர் சொல்ல அதற்காக அந்த அட்டைகளை தேடிப் பிடித்து சேகரிக்க ஆரம்பிக்கிறான் சாமுவேல்.
நாம் இப்படத்தை கதை இல்லை நிஜம் என்று கூறலாம் ஏனென்றால்
90 காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் என்று கூறும் இளைஞர்கள் அப்போது சிறுவர்கள் அவர்கள் அப்போது கிரிக்கெட் வீரர்களின் உருவ பொருத்தி அட்டைகளை வைத்து விளையாடி இருக்கின்றனர். இது போன்ற விஷயங்கள் நடந்திருக்கின்றன.
இயக்குனருக்கு பாராட்டுக்கள் 90ஸ் கிட்ஸ் சை நினைவூட்டி உள்ளார்.
இந்நிலையில் அந்தப் பணக்கார பையனின் வீடியோ கேம் திருட்டு போய்விட அந்த பழி ராஜேஷ் மீது விழுகிறது. அவனது தந்தை அவனைப் பள்ளியில் இருந்து நிறுத்தி தன்னுடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்று விடுகிறார். அத்துடன் நண்பர்களிடம் வெளியே எங்கும் ராஜேஷை செல்லவிடாமல் தன்னுடன் வேலைக்கு அழைத்துச் செல்கிறார்
ஒருமுறை திருட்டு பட்டம் கட்டப்பட்டதால் ராஜேஷ் தொடர்ந்து திருடனாகவே அறியப்படும் போது நமக்குப் பார்க்கும்போது நம் மனதை கலங்க வைக்கிறது.
ராஜேஷ் இன் நடிப்பு எதார்த்தம் அனைத்தும் அற்புதம்.
கிரிக்கெட் வீரர்கள் உருவம் பொறித்த அட்டைகளை வைத்து இவர்களால் கிரிக்கெட் மட்டை வாங்க முடிந்ததா, ராஜேஷ் மீதான திருட்டுப்பழி நீங்கியதா என்பதெல்லாம் மீதிக்கதை.
சாமுவேலாக நடித்திருக்கும் அஜிதன் தவசிமுத்து மற்றும் ராஜேஷாக நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு உள்ளிட்ட அனைத்து சிறுவர்களுமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
ராஜேஷை பார்வையே ஒரு தினுசாக இருக்கிறது. அதுவே அவனை திருடனாக நம்ப வைக்கிறது.
கன்னியாகுமரி பகுதியில் நடக்கும் கதை என்பதால் அங்கிருக்கும் சிறுவர்களையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததில் சுத்தமான குமரித் தமிழைப் படம் முழுதும் கேட்க நேர்கிறது. அதுவே படத்தின் ஒரு சுவாரசியத்துக்கும் காரணமாக அமைகிறது.
படம் பார்க்கும் நமக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போல் இருக்கும். குமரி மாவட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போல் உணர்த்தும் இப்படம். குமரி மாவட்டத்து வழக்கும், வாழ்க்கையும் அப்படியே நம் கண் முன்னால் விரிகிறது.
இயக்குனரின் தேவை புரிந்து ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தியும், இசையமைப்பாளர்கள் சாம் எட்வின் மனோகர் மற்றும் ஸ்டான்லி ஜானும் தேவைக்கேற்ப மிக அழகாக இசை பின்னனி இசை அனைத்தும் நன்றாக உள்ளது கொடுத்துள்ளனர்.
சிறுவர்களின் டியூஷன் டீச்சர் ஆக வருபவர் தொழில் முறை நடிகையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு இளம் ஆசிரியை எப்படி இருப்பாரோ, எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே சிறுவர்களை வெளுத்து வாங்குவதும், ஆனால் அந்த ஆசிரியை மேல் சிறுவர்கள் அத்தனை பாசத்துடன் இருப்பதும் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான காட்சிகள்.
ராஜேஷ் தவறு செய்யவில்லை என்று டியூஷன் டீச்சர் உணரும் காட்சி அவனைக் கட்டி அணைத்து தழுவும் காட்சி மனதை கலங்க வைக்கிறது.
இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சாமுவேலின் மனசாட்சி உணர்ந்து அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அவன் ஓடிவரும் வழிகள் எல்லாம் ஏதோ ஒரு விசேஷத்தின் காரணமாக சீரியல் லைட் செட்கள் வண்ணமயமாக எரிந்து கொண்டிருப்பதில் காட்சியின் தேவையை ஒளிப்பதிவாளர் மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்.
கொட்டும் மழை சாமுவேலின் குற்றத்தை கழுவி அவன் பின்னணியில் எரியும் வண்ண விளக்குகள் அவன் மன இருள் அகன்று ஒளிர்வதாக உணர வைக்கும் அந்த இறுதிக் காட்சி இயக்குனரின் திறமைக்கு சான்று. சாமுவேல் ராஜேஷ் வீட்டிற்கு வந்து ராஜேஷ் பார்த்து அழுது கொண்டே தான் தவறு செய்தேன் என்று அந்த கண்ணீரில் உணர்த்தும் விதம் அற்புதம். இயக்குனருக்கு பாராட்டுகள்.
கிளைமாக்ஸ் காட்சி நம் மனதை தொட்டு விட்டது.
ஆக மொத்தத்தில் இத் திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
இப்படத்தை குழந்தைகளுடன் பெற்றோர்கள் பார்க்கக்கூடிய தரமான படம்.
சிறுவன் சாமுவேல் நம் மனதை வென்றான்.
Rating : 3 .5 / 5
கருத்துகள் இல்லை