சற்று முன்



குலசாமி திரை விமர்சனம் !


விமல் நடித்திருக்கும் குலசாமி திரைப்படம்

மிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷரவண சக்தி இயக்கியுள்ள குலசாமி படம் திரைக்கு வந்துள்ளது.

நடிகர் விமல், தன்யா ஹோப் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது காண்போம்.

தனியா ஹோப்பிற்கு இப்படத்தில் பெரிதாக இல்லை அது ஒன்றுதான் குறை.

மதுரையில் ஆட்டோ டிரைவராக இருக்கும் விமல், தினமும் மதியம் 1 மணிக்கு மருத்துவக் கல்லூரி செல்கிறார். அங்கு பேராசிரியை ஒருவர் நைசாக பேசி ஒரு மாணவியைப் பணக்காரர் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார். இது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்க அதனை ஆதாரமாக சேகரித்து ஒரு பெண் தனது தோழியான தான்யா ஹோப்பின் மொபைலுக்கு அனுப்பி விட, அவரை காப்பாற்றுகிறார் விமல். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை.

பாலியல் குற்றங்களைப் முதன்மையாக வைத்துக்கொண்டு அதற்கு எதிராக எந்த அழுத்தமான வசனமும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றம். கொஞ்சம் எடிட்டிங் கில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யாவை விட விமல் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருந்தது. பேராசிரியையாக வினோதினி, வில்லனாக ஜனனி பாலு, போலீஸாக நடித்துள்ள முத்துப்பாண்டி ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

விமல் தங்கைக்கு நடந்த அநீதியைப் போல வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று போராடும் ஒரு அண்ணன் தான் குலசாமி.

மகாலிங்கம் இசையில் பாடல்கள், பின்னணி இசை சுமார் என்று கூறலாம்.

நிர்மலாதேவி, பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை இணைத்து படத்தின் கதையை எழுதியிருக்கிறார். இது போன்ற படங்கள் சமீப காலமாக வந்து கொண்டு இருக்கின்றன கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.


ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.


Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை