சற்று முன்



மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரை விமர்சனம் !


ஆஹா தமிழ் ஓடி டியில் மே - 19 ல் வெளியான மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் ?

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் ஆரவ். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன். இந்த  தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 

படத்தில் ஆரம்பத்திலேயே மகத் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையை ரவுடி கும்பல் கடத்துவதை பார்க்கிறார். இதை யாருக்கும் தெரியாமல் அவர் செல்போனில் வீடியோ யாருக்கும் அருகில் உள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கிறார். ஆனால், அந்த ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி கும்பலுக்கும் தொடர்பு இருப்பதால் மகத்தை அன்று இரவே கொலை செய்கிறார்கள்.

இப்படத்தில் வில்லனாக இயக்குனரும் மற்றும் நடிகருமான சுப்பிரமணிய சிவா அவர்கள் வில்லனாக நடித்துள்ளார். அவர் கதைக்கேற்ப மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக அமைந்துள்ளது. 

தன்னுடைய நண்பனின் இறப்பிற்கு பழிவாங்க எஸ்ஐ வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், யாசர் மற்றும் விவேக் ராஜகோபால் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், அவர்களை வேறொரு கும்பல் தீட்டுகிறார்கள். செய்து விடுகின்றனர். குழந்தை கடத்தல் கும்பலுக்கும் போலீசுக்கும் என்ன சம்பந்தம்? குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிரூபிக்கப்பட்டார்களா? என்பதை படத்தின் மீதி கதை. பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளே அவர்களுக்கு எதிராக திரும்பினால் நியாயம் எப்படி கிடைக்கும்? நீதி கிடைக்காமல் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்தால் என்ன ஆகும்? என்ற கதையை மையமாக வைத்து கிரைம் தில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் எஸ் ஐ யாக நடித்திருக்கிறார். இவர் போலீஸ் அதிகாரியாக தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வரலட்சுமி மிக நன்றாக நடித்துள்ளார். சொல்லப்போனால் படத்தின் கதை இவரை சுற்றி தான் நடக்கிறது. இவரை அடுத்து சந்தோஷ் பிரதாப் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இருந்து தான் ஆரவ் அசிஸ்டன்ட் கமிஷனர்  ஆக வருகிறார். ஆரவ் வந்த பிறகுதான் படத்தில் ட்வீஸ்ட் நடக்கிறது. ஒரு போலீஸ் அதிகாரிக்கு தேவையான கம்பீரமும் தோற்றத்திலும் ஆரவ் இருந்தாலும் சண்டைக் காட்சிகள் கொடுத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆரவ் நடிப்பு பிரமாதம்.

மேலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி நடக்கிறது. ஆனால், போர் எதுவும் அடிக்கவில்லை . பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.  கிரைம் திரில்லர் பாணியில் தான் இந்த படமும் உருவாகிறது.  அதேபோல் நண்பர்களுக்கு இடையான காட்சிகளும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் நன்றாக உள்ளது.

ஆஹா தமிழ் ஓடி டியில் வெளியானதால் வீட்டில் பார்க்கும் அனைவரும் சோபாவின் நுனியில் வருவது உறுதி.

ஆக மொத்தத்தில் இத் திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.


Rating : 3  / 5 



கருத்துகள் இல்லை