சற்று முன்



Good night திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் பிரபலமான நாயகனாக  வளர்ந்து வருபவர் மணிகண்டன்.  தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் நைட். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் நைட். பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் குட் நைட் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் மிடில் கிளாஸ் குடும்ப பையன் மோகன் இருக்கிறார். இவருக்கு தூங்கும்போது குறட்டை வரும். இது நாளடைவில் அவருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த விடும் பெரும் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் மோகன் அவமானப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவன் விடும் குறட்டையை காரணம் காட்டி காதலியும் அவரை விட்டு சென்று விடுகிறார். இதனால் மோகன் மனம் உடைந்து விரத்தியின் உச்சிக்கு செல்கிறார். தனது வீட்டில் சொல்லி கண்ணீருடன் அழுகிறார். 

அது மட்டும் இல்லாமல் தன்னந்தனியாகவே தன்னுடைய வாழ்க்கையை மோகன் நடத்திக் கொண்டு வருகிறார். அப்போதுதான் இவருக்கு அனு என்பவர் அறிமுகம் ஆகிறார். பின் நாளடைவில் இவர்களுடைய அறிமுகம் காதலாக மாறுகிறது. இவர்களுடைய காதல் கல்யாணத்தில் முடிகிறது. ஆனால், மோகன் தன்னுடைய குறட்டை பிரச்சனையை அனுவிடம் மறைக்கிறார். பின் இரவு நேரத்தில் அவருடைய குறட்டை பிரச்சினை பூகம்பமாக வெடிக்கிறது.

அதன் பின்னர் என்ன ஆனது? மோகனின் குறட்டை பிரச்சனை தீர்வுக்கு வந்ததா? அனு அவரை விட்டு பிரிந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் மோகன் படத்தின் கதாபாத்திரத்தில் மிடில் கிளாஸ் பையனாக மணிகண்டன் நடித்திருக்கிறார். காமெடி, கோபம், விரக்தி, நடுத்தர குடும்பப் பையன் என அனைத்து உணர்வுகளையும் சரியாக காண்பித்து இருக்கிறார் மணிகண்டன். குறிப்பாக, காதல் காட்சிகள் குறட்டை பிரச்சினையை தீர்க்க மோகன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் என்று கூறலாம்.. அவர் செய்யும் டாஸ்க்கள் அனைத்தும் மிக காமெடியாக நடித்துள்ளார்.  இப்படம் மணிகண்டனுக்கு மிக வெற்றி படமாக அமையும் என்று கூறலாம்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களின் நடிப்பு மிக எதார்த்தமாக அற்புதமாக உள்ளது.

கதாநாயகியாக மீத்தா ரகுநாத் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மீத்தாவிற்கு இப்படம் மிக வெற்றி படமாக  அமைந்துள்ளது. இனி இது போன்ற கதைகளை இவர் தேர்ந்தெடுத்து நடித்தால் மிக அற்புதமாக இருக்கும்.

மாமா கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் நடித்திருக்கிறார். காமெடிகில் அவர் பட்டைய கிளப்பியுள்ளார் என்று கூறலாம். ரமேஷ் திலக் இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். குடும்பத்தை கொண்டு செல்லும் விதம் பாராட்டுக்குரிய ஒன்று. இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்திற்கு பாராட்டுகள்.

மேலும், இயக்குனர் கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார். அதோடு படத்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளும் நம் வீட்டில் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.  மொத்தத்தில் இந்த கோடைகால விடுமுறைக்கு குட் நைட் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று கூறலாம். 

ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் குடும்பத்துடன்  பார்க்கக்கூடிய திரைப்படம்.

மணிகண்டன் அவர்களுக்கு குட் நைட் திரைப்படம்  விடியலாக இருக்கும்.

குட் நைட் நமக்கு ஒரு நல்ல குட் நைட் ஆக இருக்கும். 

Rating : 4 .5 / 5



கருத்துகள் இல்லை