சற்று முன்



தலைநகரம் 2 திரை விமர்சனம் !


இயக்குனர் , நடிகர் சுந்தர் சி நடிப்பில்

இயக்குனர் விஇசட் துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தலைநகரம் 2. இந்த படத்தில்  சுந்தர் சி, பாலக் லால்வானி, தம்பி ராமையா சி, பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ரைட் ஐ தியேட்டர்ஸ், அருந்தவம் மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன்  வெளியாகி இருக்கும் தலைநகரம் 2 படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் தலைநகரம் 2. இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி நடித்த அதே ரைட் கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் வடசென்னையின் மிகப்பெரிய ரவுடியாக ரைட் கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அதை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார் சுந்தர் சி.

பின் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று பகுதிகளிலும் பிரபலமான ரவுடியாக இருக்கும் மூவருக்கும் முன்னாள் ரவுடியான சுந்தர் சிக்கும் இடையே பிரச்சனை ரவுடியான அந்த பிரச்சினையை முடிக்க அவர் மீண்டும் ரவுடியாக மாறுகிறார். கடைசியில் சுந்தர் சி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை. படம் முழுவதுமே சுந்தர் சி சண்டைக் காட்சிகளுடன் இருக்கிறார். அவரின் சண்டை காட்சிகளில் ஒவ்வொரு அடியும் இடிபோல இறங்குகிறது என்று சொல்லலாம்.

படத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு வில்லனுடைய அறிமுகம் மிக அற்புதமாக காண்பித்துள்ளார்.

மேலும், படத்தில் மூன்று வில்லன்களையும் தனித்தனியாக சுந்தர் சி வைத்து செய்கிறார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் படம் முழுவதும் சுந்தர் சி தாங்கி செல்கிறார். ஆனால், சுந்தர் பாகுபலி பிரபாகர் மட்டும்தான் தெரிந்த முகம்.  மற்ற வில்லன்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர் கதைக் கேட்ப மிக கச்சிதமாக நடித்துள்ளனர்.

படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வானியை நடித்திருக்கிறார்  கிளாமராகவும் படத்தில் ஒரு கதாநாயகியாகவே நடித்துள்ளார். கதை கேட்ப கச்சிதமாக நடித்துள்ளார்.

சண்டை காட்சிகள் மிக அற்புதமாக போட்டுள்ளார். ஸ்டன்ட் காட்சிகள் அனைத்துமே அற்புதம். நாம் சுந்தர்சியை பழைய ரைட்டை பார்த்துள்ளோம்.

தம்பி ராமையாவின் நடிப்பு பிரமாதம் இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் தந்தை மகள் பாசம் போன்ற அனைத்தும் காட்சிகளும் நன்றாக உள்ளது.

சென்டிமென்ட் காட்சிகளும்  சில இடங்களில் தான் வருகிறது. காமெடி காட்சிகள் இப்படத்தில் இல்லை அது ஒன்றுதான் குறை.

படத்திற்கு பின்னணி இசை பக்க பலமாக அமைந்துள்ளது பேக்ரவுண்ட் பிஜிஎம் அனைத்தும் நன்றாக உள்ளது. இசையும் கச்சிதமாக அமைந்துள்ளது படத்திற்கு.

திரைப்படம் ஆக்சன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் திரைப்படம் ஆக்சன் ரசிகர்களுக்கு கொண்டாடும் படமாக அமைந்துள்ளது அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating: 3 / 5 


Marveltamilnews.com


கருத்துகள் இல்லை