Header Ads

சற்று முன்



வார்னர் பிரதர்ஸ் வழங்கும் தி பிளாஷ் !


வார்னர் பிரதர்ஸ் வழங்கும்

தி பிளாஷ்

இது, டிசி சூப்பர் ஹீரோவான பிளாஷ், நாயகனாகத் தனித்தியங்கும் முதல் திரைப்படமாகும்.

பேரி ஆலன், தனது சூப்பர் பவர்களைப் பயன்படுத்திக் காலத்தின் பின்னால் சென்று சில நிகழ்வுகளை ஒழுங்கப்படுத்த நினைக்கும் பொழுது, உலகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்றன. தனது குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஏற்படும் பேரி ஆலனின் கவனக்குறைவால், எதிர்காலம் மாற்றியமைக்கப்பட்டு, காலத்திற்குப் பிந்தைய உலகிலேயே மாட்டிக் கொள்கிறான். அச்சுறுத்தும் நாசகர அழித்தலில் ஈடுபட்ட ஜெனரல் Zod திரும்பி விடுகிறான். பூமியைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்கள் யாருமில்லாததால், தனது ஓய்வுக்காலத்தில் இருக்கும் வினோதமான பேட் மேனின் (Bat Man) உதவியை நாடி, சிறைப்பட்டிருக்கும் க்ரிப்டோனியனை மீட்கிறான். ஆனால், பேரி ஆலன் மீட்டதோ அவன் எதிர்பார்த்த நபர் இல்லை.

தான் சிக்கிய காலத்தில் இருக்கும் பூமியைக் காப்பாற்றவும், எதிர்காலத்திற்கு மீண்டும் செல்லவும், பேரி ஆலனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் உயிரைப் பணயம் வைத்து ஓடுவதே!  ஆனால் பேரியின் இந்தத் தியாகம், பிரபஞ்சத்தைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்கப் போதுமானதாக இருக்குமா? 

CREDITS-

*நடிகர்கள்* - Sasha Calle, Michael Shannon, Ron Livingston Maribel Verdú, Kiersey Clemons, Antje Traue  and Michael Keaton 

Screen story by John Francis Daley & Jonathan Goldstein based on characters from DC

ஒளிப்பதிவு -Henry Braham

உடை வடிவமைப்பு - Alexandra Bryne

இசை - Benjamin Wallfisch

வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் வெளியீடு.


Marveltamilnews.com



கருத்துகள் இல்லை