சற்று முன்



பாயும் ஒளி நீ எனக்கு திரை விமர்சனம் !


 நடிகர் விக்ரம் பிரபு  நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு. இந்த படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தனஜெயன், விவேக் பிரசன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியாகியிருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் கதாநாயகன் விக்ரம் பிரபு தன்னுடைய நண்பன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஒரு சிறிய கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு விக்ரம் பிரபுவிற்கு படத்தில் கண் பார்வை குறைபாடு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு நாள் யாரோ சிலர் விக்ரம் பிரபுவை கடத்தி அடைத்து வைத்திருக்கிறார்கள். இருந்தும் அங்கிருந்து எப்படியோ விக்ரம் பிரபு தப்பித்து விடுகிறார்.

அதன் பின் தன்னுடைய சித்தப்பா ஆனந்தை யாரோ கொலை செய்கிறார்கள். அப்போது விக்ரம் பிரபு சித்தப்பா உடன் தான் இருக்கிறார். இரவு நேரமானதால் விக்ரம் பிரபுவிற்கு பார்வை சரியாக தெரியாமல் போகிறது. இதனால் தன்னுடைய சித்தப்பாவை காப்பாற்ற முடியாமல் போகிறது என்று விக்ரம் பிரபு தவிக்கிறார். சித்தப்பாவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க விக்ரம் பிரபு துடிக்கிறார்.

இறுதியில் அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா? பழிவாங்கினாரா? விக்ரம் பிரபுவிற்கு இருக்கும் பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். அவருடைய ஹேர் ஸ்டைல், தாடி எல்லாமே மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் இவருக்கு கண் குறைபாடு இருக்கிறது என்பது படத்தில் காட்டவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவருடைய பிரச்சனை தெரிகிறது. வழக்கம் போல் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து கதாநாயகியாக வாணி போஜன் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் வாணி போஜன் உடைய கதாபாத்திரத்தை அழுத்தமாக கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். இவரை அடுத்து விக்ரம் பிரபுவின் நண்பராக விவேக் பிரசன்னா நடித்திருக்கிறார்.

இவர்கள் கொலையாளியை கண்டுபிடிக்க முயற்சித்து இருக்கும் போது நகைச்சுவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. வில்லனாக தனஞ்செயன் நடித்திருக்கிறார்.  பின்னணி இசை படத்திற்கு பக்கபலம் என்று சொல்லலாம். ஆனால், ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்ந்திருக்கிறது.

நடிகர் விக்ரம் பிரபு மிக நன்றாக நடித்துள்ளார்.

விவேக் பிரசன்னா கதைக்கேற்ப கதாபாத்திரமாக அமைந்துள்ளார்.

நடிகை வாணி போஜன்  அழகாக உள்ளார்.  நன்றாக நடித்துள்ளார்.

ஆரம்பக் காட்சிகள் நன்றாக சென்றாலும் கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்து இருக்கலாம் என்று சொல்லலாம். சில காட்சிகள் எல்லாம் சினிமாத்தனமாகவே இருக்கிறது. இயக்குனர் இன்னும் கதைக்களத்தில் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் கொடுத்திருந்தால் படம் டாப் கியரில் சென்றிருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது. 

ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.


Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை