மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர் இசையமைப்பாளர் #MMகீரவாணி!
மீண்டும் தமிழில் இசையமைக்கும் ஆஸ்கர் வின்னர் இசையமைப்பாளர் #MMகீரவாணி !
பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் #ஜென்டில்மேன்2 படத்திற்கு விரைவில் கம்போசிங்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக, பல பிரமாண்ட படைப்புகளை தந்த மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' K.T.குஞ்சுமோன். சரத்குமார் முதல் இயக்குநர் ஷங்கர் வரை பல ஜாம்பவான்களை திரையுலகிற்கு தந்தவர். பிரமாண்ட படங்களை தயாரித்தது மட்டுமில்லாமல், திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதிலும், படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பிரமாண்டமாக நிகழ்த்திக்காட்டியவர். தற்போது மீண்டும் பிரமாண்ட திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.
S.S.ராஜ்மௌலியின் #RRR படத்தின் 'நாட்டு நாட்டு.. ' பாடலுக்காக 'பெஸ்ட் ஒரிஜினல் சாங்' ஆஸ்கர் விருதை பெற்று உலகமே கொண்டாடி வரும் இசையமைப்பாளர் #M.M.கீரவாணி, "ஜென்டில் மேன்-2" படத்தின் மூலம் மீண்டும் தமிழில் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் அடுத்த கட்டமாக, இப்படத்தின் டைரக்டர் A.கோகுல் கிருஷ்ணா ஐதராபாத்திற்கு சென்று முழு கதையையும் கீரவாணிக்கு நேற்று சொல்லி முடித்தார். கதை பிரமாண்டமாக இருக்கிறது.. அடுத்த மாதமே கம்போசிங் ஆரம்பித்து விடலாம் என்று ஜென்டில் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனிடன் கீரவாணி சொன்னார். இதை பிரமாண்டமாக தயாரிக்க போகிறேன் என்று கீரவாணியிடம் குஞ்சுமோன் சொல்ல,
சூப்பர்.. வாழ்த்துக்கள் சார் என்றார் கீரவாணி.
அதற்கான வேலைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறார், K.T.குஞ்சுமோன்.
கருத்துகள் இல்லை