நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க தலைவர் மரியாதை செய்தார் !
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.07.2023) நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார்.
அதன் பின் அவர் கூறியதாவது..
நான் நடிக்கின்ற நொடிப்பொழுதும் நினைவிற்கு வருகின்ற என் ஆசான். என் சமூகத்தில் தோன்றி வண்டமிழ் பேசி காலத்தால் கரையாத காவியங்கள் படைத்திட்ட என் பெருமகனார். சிவாஜிகணேசன் ஐயா அவர்களின் நினைவேந்தல் இன்று தென்னிந்திய நடிகர் சங்கமும் வையமும் உம்மை போற்றுதும்.. போற்றுதும்.. போற்றுதும்.
மற்றும்,
துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சரவணன், ஶ்ரீமன், பிரகாஷ், ஹேமச்சந்திரன், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
- Johnson PRO
கருத்துகள் இல்லை