சற்று முன்



வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை !

வேளாண் வர்த்தக திருவிழா ; பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை !

கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம்  நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். 

இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

இது குறித்த தகவலை மிகவும் அக்கறையுடன் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர். அனைவரும் குடும்பத்துடன் இந்த திருவிழாவுக்கு வந்து வேளாண் மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

- johnson Pro 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை