சற்று முன்



டைனோசர்ஸ் திரை விமர்சனம் !


அறிமுக இயக்குனர் எம் ஆர் மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டை னோ சர்ஸ். இந்த படத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய்பிரியா தேவா, மனோக்ஷா உட்பட பல புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்திருக்கிறார். போபோ சசி இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜோன்ஸ்வி ஆனந்த் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வடசென்னையில் உள்ள இரண்டு ரவுடிகளுக்கு இடையேயான சண்டையை மையமாக வைத்து இந்த இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் வடசென்னையை காண்பிக்கிறார்கள். இங்கு சாலையார் மற்றும் கிளியப்பன் என்று இரண்டு கும்பல் இருக்கிறது. இந்த கும்பலுக்கு இடையே எப்போதும் சண்டை முட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கிளியப்பன் மச்சானை சாலையார் தன்னுடைய அடியாட்களை வைத்து கொன்று விடுகிறார். இதனால் இரண்டு ரவுடி கும்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. பின் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை சமரசத்திற்கு வந்து விடுகிறது.

அப்போது மச்சானை கொலை செய்த எட்டு பேரையும் சரணடைய சொல்கிறார் கிளியப்பன். இதில் ஒருவனுக்கு அப்போது தான் திருமணமாகி இருக்கிறது. இதனால் அவனுக்கு பதில் அவருடைய நண்பன் சிறைக்கு செல்கிறான். இதனால் சமாதானம் அடைந்த கிளியப்பன் வீட்டிற்கு பணம் வாங்க சாலையார் கும்பலிலிருந்து ஆட்கள் செல்கிறார்கள். அவர்களுடன் அந்த கொலையாளியும் செல்கிறான். அந்த கொலையாளியை பார்த்த கிளியப்பன் அதிர்ச்சி அடைகிறார்.

இறுதியில் என்ன ஆனது? உண்மையில் கொலை செய்தவன் ஜெயிலுக்கு போனானா? இதனால் இருகும்பலுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் உதய் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகனுக்கு சண்டை என்றாலே பிடிக்காது. ஆனால், அவர் சூழ்நிலை காரணமாக கத்தியை கையில் எடுக்கிறார். அதை அவர் எப்படி சாமர்த்தியமாக கையாண்டு பழி வாங்கினார் . என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் .

அதோடு வடசென்னை மக்களின் வாழ்க்கை முறையையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்.

ஆனால், இதை  சுவாரசியம் ஆக காண்பித்து இருக்கிறார் . கதாநாயகி சாய் ப்ரியா சில காட்சிகளில் வந்து செல்கிறார்.  பாடல்கள் பெரிதாக  இல்லை. இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது  மொத்தமாக வடசென்னை பகுதியை அப்படியே காண்பித்து இருக்கிறார்கள்  ரவுடி, அடிதடி, சண்டை, ரத்தம் என்று வடசென்னை ஏ நாம் நேரில் பார்த்தது போல் தோன்றுகிறது.

ஆக்சன் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் பார்க்க கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை