கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள் !
கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள் !
கிக் பாக்ஸிங் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பல கிக் பாக்ஸிங் சாம்பியன்கள் உலகத்தரத்தில் உருவாகி இருக்கிறார்கள்
குறிப்பாக நம் தமிழகத்தை சேர்ந்த விமல் ராஜ், அகதீஸ்வரன் ஆகிய இரு மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் பகுதியில் நடை பெற்ற கிக் பாக்ஸிங் உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பாக போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்
விமல் ராஜ் என்ற மாணவரின் வயது 13 தற்போது 8ம் வகுப்பு படித்து வருகிறார் இவர் கடந்த 3 வருடமாக கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று வருகிறார்.
2021-திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வென்றார்
2021-இராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்
2023-கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பக கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார்
2023-இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் இந்தியா சார்பாக வயது அடிப்படையின் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
அகஸ்தீஸ்வரன் என்னும் மாணவரின் வயது 20 தற்சமயம் கல்லூரி 2ம் வருடம் படித்து வருகிறார் கடந்த 5 வருடமாக கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று வருகிறார்.
2021-சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கபதக்கம் வென்றார்
2021-இராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
2022-கேரளாவில் நடை பெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
2023-இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் இந்தியா சார்பாக வெள்ளி பதக்கம் வென்றார் .
இந்த 2 மாணவர்களும் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தனியார் கிக் பாக்ஸிங் மையத்தில் பயிற்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை