சற்று முன்



கொலை திரை விமர்சனம் !

விஜய் ஆண்டனி நடிப்பில் கொலை. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது. 

தற்போது இந்த படத்தை பாலாஜி கே குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை Infiniti Film Ventures மற்றும் Lotus Pictures இணைந்து தயாரித்திருக்கிறது. திரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் கொலை படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் மிகப் பிரபலமான மாடலாக லைலா இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து இருக்கிறார். இந்த கேஸ் காவல்துறை அதிகாரியாக இருக்கும் ரித்திகா சிங்கிடம் வருகிறது. ஒரு வாரத்திற்குள் இந்த கேசை முடிக்க வேண்டும் என்று மேல் அதிகாரிகள் ரித்திகா சிங்குக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் இருந்த ரித்திகா, விஜய் ஆண்டனி இடம் உதவி கேட்கிறார்.

ஆனால், விஜய் ஆண்டனி இந்த கேசை எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறார்.

பின் விஜய் ஆண்டனி இந்த கேசை சில காரணங்களை எடுத்து கொள்கிறார். மேலும், இந்த கேசை ரித்திகா, விஜய் ஆண்டனி இணைந்து விசாரிக்கத் துவங்குகிறார்கள். இறுதியில் இந்த கொலையை யார் செய்கிறார்கள்? கொலைக்கு பின்னணி என்ன? குற்றவாளியை விஜய் ஆண்டனி கண்டுபிடித்தாரா? எதற்காக லைலா கொலை செய்யப்பட்டார்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் விஜய் ஆண்டனி அவர்கள் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும், அவருடைய நடிப்பு ரசிகர்களின் மதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை பார்த்திராத விஜய் ஆண்டனியை இப்படத்தில் நாம் பார்த்துள்ளோம்.

 ரித்திகா சிங் நடிப்பும் சுமார் என்றுதான் சொல்லணும். 

ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை . அவருக்கு படத்தில் கதாபாத்திரம் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்த உள்ளார். அவர்களுக்கு ஒரு சண்டைக் காட்சி கொடுத்திருந்தால் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் ஹைலைட்டாக இருந்திருக்கும்.


அறிமுக நாயகி லைலா என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சி சௌந்தரி நடித்திருக்கிறார். இவர்களின் நடிப்பும் நன்றாக உள்ளது. கதைக்கேற்ப மிகக் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

ராதிகா சரத்குமார் எதற்காக இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரியவில்லை. ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நடிகர்களின் நடிப்பில் இன்னும் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே போல் இயக்குனர் எடுத்துக் கொண்ட கதைகளம் சுவாரசியமாக இருந்தாலும் த்ரில்லர் கதை என்று சொல்லி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மெதுவாக சென்றது ஒன்றுதான் குறை.  

அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளர்களே யூகிக்க கூட முடியவில்லை. மிக நன்றாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

 சமீபத்தில் கமர்சியலாக பிச்சைக்காரன் 2 படத்தை பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டு கொலை படம் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படம் பார்த்தது போல் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை கொடுத்துள்ளார்.   பின்னணி இசை மிரட்டி உள்ளார்

 செட் வேற லெவல் என்று கூறலாம். எடிட்டிங் மிக அற்புதமாக செய்துள்ளார்.

இத்திரைப்படம் விஜய் ஆண்டனி படங்கள் வரிசையில் ஒரு மாறுபட்ட வித்தியாசமான படம் என்று கூறலாம்.

ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating: 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை