ராயர் பரம்பரை திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிருஷ்ணா.
இவர் நடிப்பில் ராயர் பரம்பரை திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை ராம்நாத் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் 90களில் வில்லனாக ஜொலித்த 2கே கிட்ஸின் காமெடி மன்னன் ஆனந்த்ராஜ் நடித்துள்ளார் . 70களின் கனவு கன்னி புன்னகை அரசி கே ஆர் விஜயா கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
மற்றும் மொட்டை ராஜேந்தர், கஸ்தூரி , மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொங்கு மண்டலத்தை சுற்றி எடுக்கப்பட்ட படம்.
பொள்ளாச்சியில் செல்வாக்கு உள்ள ஒரு பெரிய மனுஷன் தான் ராயர் , (ஆனந்தராஜ்) இவருக்கு காதல் என்றால் பிடிக்காது அதற்கு காரணம் இவரின் தங்கை (கஸ்தூரி) ஒருவரை காதல் செய்துகொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார் , அதனால் ஆத்திரமடைந்த ராயர் அன்றிலிருந்து ஊருக்குள் யாரும் காதலிக்க கூடாது என கட்டுப்பாடு போட்டுவிடுகிறார். ராயர் ஆனந்த்ராஜிற்கு ஒரு மகள் தன்மகள் காதலித்து திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக ஜோசியரிடம் சென்று ஊரில் உள்ள அனைத்து இளைஞர்களின் ஜாதகத்தையும் கொடுத்து இதில் யாருக்கெல்லாம் காதல் திருமணம் என்று தெரிந்து கொண்டு ஊரில் உள்ள இளைஞர்களை சொந்த செலவில் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கிறார்.
ராயருக்கு ஒரு பெண் இருக்கிறார், அவரை கதையின் நாயகன் கிருஷ்ணா காதலிக்கிறார் , காதலே பிடிக்காத ராயரை எதிர்த்து இவர்கள் இருவரும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
காதலை எதிர்த்து மொட்டை ராஜேந்தர் ஒரு சங்கம் ஆரம்பித்து அதில் கிருஷ்ணா செயலாளராக பணியாற்றுகிறார் இவர்கள் செய்யும் காமெடி கொஞ்சநஞ்சம் அல்ல.
ஜோசியராக மனோபாலா மிக நன்றாக நடித்துள்ளார்.
கே ஆர் விஜயா நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றுகிறார் நன்றாக நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஆனந்தராஜ் நடிப்பு பக்க பலமாக அமைந்துள்ளது .
படத்தில் முக்கிய சஸ்பென்ஸ் காட்சி இன்டெர்வல் பிளாக் என்று கூறலாம்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் சுமாராக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating: 2.5 / 5
கருத்துகள் இல்லை