சற்று முன்



கசான்ஜி ஜூவல்லர்ஸ் IPO பங்கு வெளியீட்டின் மூலம் Rs. 96.74 கோடி திரட்டவுள்ளது !


கசான்ஜி ஜூவல்லர்ஸ் IPO பங்கு வெளியீட்டின் மூலம் Rs. 96.74 கோடி திரட்டவுள்ளது !

இது ஜூலை 24, 2023 அன்று தொடங்குகிறது.

நேஷனல், ஜூலை 21, 2023: சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கசான்ஜி ஜூவல்லர்ஸ் லிமிடெட், அதன் இனிஷியல் பப்ளிக் ஆஃபர்-உடன் (IPO), Rs. 10 மதிப்புள்ள 6910000 ஈக்விட்டி பங்குகளை ஒவ்வொரு பங்கிற்கும் Rs.140 என்ற ஒரு மாறா விலையில் (ஒரு பங்கிற்கு பிரீமியமாக Rs. 130 உட்பட), Rs. 96.74 கோடியைத் திரட்ட வெளிவருகிறது.

கசான்ஜி, மார்கெட் மேக்கர்-க்காக 346000 ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கியுள்ளது. மீதமுள்ளவற்றிலிருந்து, இது HNI-களுக்கு 50% மற்றும் ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு 50% ஒதுக்கியுள்ளது. IPO மூலம் பெறப்படும் நிகர நிதியிலிருந்து, இந்நிறுவனம் Rs. 8.62 கோடியை புதிய ஷோரூம்கள் திறப்பதற்கும், Rs. 20.00 கோடியை புதிய ஷோரூம்களுக்கான இருப்புப் பொருட்களுக்கும் Rs. 55.00 கோடியை நடப்பு மூலதனத்திற்காகவும் மற்றும் Rs. 12.00 கோடியை நிறுவனத்தின் பொதுப்படையான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும்.

மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நிதியாண்டில், நிகர லாபமாக Rs. 7.57 கோடியுடன் அதன் விற்றுமுதலாக Rs. 481.82 கோடியை பதிவு செய்துள்ளது. மார்ச் 31, 2022 அன்று முடிவடைந்த நிதியாண்டில், நிகர லாபமாக Rs. 3.27 கோடியுடன் அதன் விற்றுமுதலாக RS. 258 கோடியை பதிவு செய்துள்ளது. மார்ச் 31, 2021 அன்று முடிவடைந்த நிதியாண்டில், நிகர லாபமாக Rs. 2.76 கோடியுடன் அதன் விற்றுமுதலாக RS. 381.81 கோடியை பதிவு செய்துள்ளது காட்டியுள்ளது.

இந்நிறுவனம் அதன் நற்சாட்சிப் பத்திரமாக BSE லிமிடெட் (அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை)-இன் அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த IPO பங்கு வெளியீடு ஜூலை 24, 2023 அன்று தொடங்கி, ஜூலை 28, 2023 அன்று முடிவடைகிறது. விண்ணப்பம் மற்றும் வர்த்தகத்திற்கான சந்தை லாட் 1000 பங்குகளாக இருக்கும். பங்குகள் BSE SME இல் பட்டியலிடப்படும்.

கசான்ஜி ஜூவல்லர்ஸ் மார்ச் 1996 இல் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2023 இல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றப்பட்டது.

மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய இரண்டிலும் வலுவான முன்னிலையில் உள்ள இந்நிறுவனம் இந்தியாவின் நகை விற்பனைத் துறையில் முக்கிய ஜாம்பவானனாகப் பங்கு வகிக்கிறது. தங்க நகைகள், வைர நகைகள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் இதர ஆடம்பரமான நகைகள் மற்றும் நாணயங்கள் மற்றும் பார்கள் வடிவிலான கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நகை தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்தியாவில் நகை வியாபாரத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் வணிகம் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் இந்த துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் கொண்ட அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர் ஆவர்.

அவர்கள் பலதரப்பட்ட நகை தயாரிப்புகளை வழங்குவதுடன், நெக்லஸ்கள், செயின்கள், மோதிரங்கள், காதணிகள், வளையல்கள், பிரேஸ்லெட்-கள், பென்டென்-கள், மூக்குத்திகள், மங்கள நாண்கள் மற்றும் ‘கடா’ எனப்படும் காப்பு வளையங்கள் போன்ற உயர்தர நகைகளை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதில் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அவர்களின் கவனமானது மிகநேர்த்தியான திருமண நகைகள் மற்றும் பண்டிகை நிகழ்வுகளுக்கு ஏற்ற மற்றவைகளை உருவாக்குவதில் உள்ளது.

TARACHAND MEHTA, GOUTHAM, TARACHAND MEHTA AND SONS, GOUTHAM HUF AND FANCY DEVI ஆகியோர் இந்நிறுவனத்தின் புரொமோட்டர்-கள் ஆவர்.

இந்த பங்கு வெளியீட்டை மார்க் கார்ப்பரேட் அட்வைஸர்ஸ் பிரைவேட் லிமிடெட் முன்னின்று நிர்வகிக்கிறது. மற்றும், கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் இப்பங்கு வெளியீட்டின் பதிவாளர் ஆவர்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை