Header Ads

 


சற்று முன்பயன்படுத்திய (பழைய) கார்கள் துறையில் தலைமை வகிக்கும் கார்ஸ்24, தரம் மற்றும் நம்பிக்கைக்கான தர அளவுகோலை நிறுவுகிறது !

பயன்படுத்திய (பழைய) கார்கள் துறையில் தலைமை வகிக்கும் கார்ஸ்24, தரம் மற்றும் நம்பிக்கைக்கான தர அளவுகோலை நிறுவுகிறது !

சென்னை,22 ஆகஸ்ட், 2023: இந்தியாவில் முன்னணி ஆட்டோடெக் நிறுவனமாக திகழும் கார்ஸ்24, ஸ்மார்ட்டான முறையில் வாகனத்தை சொந்தமாக வாங்கும் செயல்முறையை ஊக்குவிப்பதில் முதன்மை வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முன்பே பயன்படுத்திய (பழைய) கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2023 – ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பயன்படுத்திய கார்களுக்கான விற்பனை 80 விழுக்காடு அதிகரித்து இருப்பது இதை வலுவாக சுட்டிக் காட்டுகிறது. பழைய கார்களை வாங்குவதற்கு இம்மாநிலத்தில் கார் ஆர்வலர்களது நம்பிக்கையையும்,  நன்மதிப்பையும் பெற்ற கார்ஸ்24, புத்தாக்க நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களது திருப்தி மற்றும் சந்தையில் ஆதிக்கம் ஆகிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இத்துறையில் தர அளவுகோல்களை நிர்ணயித்து முதலிடம் வகிக்கிறது. 

தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பயன்படுத்திய பழைய கார்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி காணப்படுகிறது. காரை சொந்தமாக வாங்குவதில் விவேகமான செயல்முறையின் ஆதாயங்களை முன்னிலைப்படுத்துகிறவாறு வெளிப்படையான மற்றும் திறன்மிக்க செயல்முறையை இந்த வளர்ச்சிக்கு காரணமாக கூறலாம். பயன்படுத்திய பழைய கார்கள் வசதியானவையாக, எளிதில் வாங்கத்தக்கதாக மற்றும் குறைவான விலையுள்ளதாக இருப்பதை மக்கள் இப்போது தெளிவாக உணரத் தொடங்கியிருக்கின்றன. முன்பே பயன்படுத்திய கார்களுக்கான சந்தை வழங்கும் மதிப்பை அதிக எண்ணிக்கையிலான மக்கள் அங்கீகரிப்பது, காரை சொந்தமாக வாங்குவது தொடர்பான மனப்பான்மையில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்ற போக்கை சுட்டிக்காட்டுகிறது. 

2017 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் தனது செயல்பாட்டை தொடங்கியதற்குப் பிறகு மாநிலம் முழுவதிலும் 12 நகரங்களில் கார்ஸ்24 வேகமாக தனது செயற்பரப்பை விரிவுபடுத்தியிருக்கிறது. காரை வாங்க திட்டமிடுபவர்களுக்கும் அவற்றை விற்பவர்களுக்கும் முதலில் அணுக வேண்டிய அமைவிடமாக கார்ஸ்24-ஐ இந்த விரிவான செயற்பரப்பு ஆக்கியிருக்கிறது. பழைய கார்களுக்கான பரிவர்த்தனை தளத்தில் குறிப்பிடத்தக்க நிலைமாற்றம் ஏற்படுவதற்கு இது தூண்டியிருக்கிறது. 2017ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் முன்னோடித்துவமான நுழைவு தமிழ்நாடு மற்றும் சென்னையின் ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு மிக முக்கிய தருணமாக அமைந்தது. சிறப்பான சேவையையும், மேம்பட்ட மதிப்பையும் வழங்குவது மீது இது கொண்டிருக்கும் தளராத உறுதியே இத்தொழில்துறையில் நிகரற்ற நன்மதிப்பையும், கௌரவத்தையும் இந்நிறுவனத்திற்கு பெற்றுத் தந்திருக்கிறது. 

சாலை கட்டமைப்பு வசதிகளில் அரசுகள் செய்துவரும் முதலீடுகளின் காரணமாக சென்னையில் ஆட்டோமொபைல் துறை வலுவான வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலை செயல்திட்டம் (ECR), ஜிஎஸ்டி சாலையில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடும்பாதை போன்ற சாலை வலையமைப்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டு பணிகள், மாநகரத்திற்குள்ளும் மற்றும் அதைக் கடந்தும் இணைப்பு வசதியை மேம்படுத்தியிருக்கிறது மற்றும் பயணத்தை எளிதாக்கியிருக்கிறது. ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடும்பாதையில் கட்டுமானப்பணியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தொடங்கவிருப்பது, தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் பகுதிகளுக்கு பயணிக்கும் வாகனங்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கும். ரூ. 3,523 கோடி செலவு மதிப்பீட்டில் இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.  

கார்ஸ்24 – ன் இணை நிறுவனர் திரு. கஜேந்திரா ஜாங்கிட், கூறியதாவது: “பயன்படுத்திய கார்கள் விற்பனையில் காணப்பட்டிருக்கும் இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி, தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் சூழல் அமைப்பு மாற்றம் கண்டு வருகிறது என்பதற்கான நேர்மறையான சுட்டிக்காட்டல் அம்சமாக இருக்கிறது. தங்களது விருப்பத்தேர்வுகளில் அதிக ஆர்வமும், விவேகமும் உள்ளவர்களாக நுகர்வோர்கள் மாறி வருகின்றனர்; கட்டுப்படியாகக்கூடிய மிதமான விலை என்ற அம்சத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பயன்படுத்திய காரை சொந்தமாக வாங்கி பயன்படுத்துவதில் நடைமுறை பயன்பாடு மற்றும் நீண்டகால மதிப்பு ஆகிய முக்கிய அம்சங்களையும் கவனத்தில் கொள்கின்றனர்”. 

தமிழ்நாட்டில் பயன்படுத்திய கார்களுக்கான சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய வியப்பான உண்மைகளையும், தகவல்களையும் கார்ஸ்24 – ன் சமீபத்திய தகவல் வழங்குகிறது. குறிப்பாக, சென்னையில் சுஸுகி மாடல் கார்களுக்கு மிக அதிகமான 15000– கும் கூடுதலான டெஸ்ட் டிரைவ்களுக்கு முன்பதிவு  செய்யப்பட்டிருப்பது, மாருதி ஆல்டோ 800 மற்றும் சுஸுகியின் பிற மாடல்களுக்கு கார் வாங்குபவர்கள் மத்தியில் அதிக விருப்பமும், வலுவான பிணைப்பும்  இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. கார் வாங்க திட்டமிடுபவர்களின் சராசரி வயது 35 ஆண்டுகளாக இருப்பது, மாறிவரும் இந்த சூழல் அமைப்பை நிர்ணயிப்பது இள மற்றும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள் என்பதை கோடிட்டு காட்டுகிறது. 

கார் விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கார்ஸ்24: 2023 முதல் அரையாண்டில் தமிழ்நாட்டு மக்கள் ரூ 222 கோடி மதிப்புள்ள கார்களை விற்பனை செய்திருக்கின்றனர் 

 2023 முதல் அரையாண்டில் , இம்மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ரூ 222 கோடி மதிப்புள்ள கார்களை விற்பனை செய்து தமிழ்நாடு கார் சந்தையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதை கார்ஸ்24 -  ன் தரவு வெளிப்படுத்துகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு தங்களது கார்களை மாற்றி வேறு கார்களை வாங்கும் தற்போதைய போக்கு, இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது. மாறிவரும் விருப்பங்கள், நவீன அம்சங்கள் கொண்ட புதிய மாடல் கார்களை வாங்கும் விருப்பம் அல்லது கவர்ச்சிகரமான நிதிவசதி/கடன் விருப்பத்தேர்வுகள் கிடைக்கும் நிலை போன்ற பல காரணிகளினால் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடும். இதன் விளைவாக தாங்கள் பயன்படுத்திய கார்களை அதிக நபர்கள் விற்பனை செய்ய முடிவு செய்வதால் வசதி, நம்பிக்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட விற்பனை செயல்முறை ஆகியவற்றை வழங்கும் கார்ஸ்24 போன்ற செயல்தளங்களுக்கு துடிப்பான சந்தையை அவர்கள் உருவாக்குகின்றனர். 

ஆட்டோமொபைல் தொழிற்துறையானது வளர்ந்து வரும் புதிய போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களை வரவேற்று செயல்படுத்துகின்ற நிலையில், இந்தியாவில் 150 -  க்கும் அதிகமான நகரங்களில் வலுவான செயல்பாட்டை கொண்டிருக்கும் கார்ஸ்24, கார் விற்பனை மற்றும் கார் வாங்கும் செயல்முறையின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பு செய்வதில் மிக முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், பொள்ளாச்சி, கடலூர், ஓசூர், திருநெல்வேலி, பாண்டிச்சேரி மற்றும் திருப்பூர் உட்பட 12 நகரங்களில் இயங்கி வரும் கார்ஸ்24, பயன்படுத்திய கார்கள் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 Marveltamilnews.com


கருத்துகள் இல்லை