சற்று முன்



சென்னை, ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையில் ஹார்ட் இன்ஸ்டிடியூட் (இருதய சிகிச்சை மையம்) திறப்பு !

சென்னை, ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையில் ஹார்ட் இன்ஸ்டிடியூட்  (இருதய சிகிச்சை மையம்) திறப்பு  !


தமிழ்நாடு அரசின் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், காவேரி மருத்துவமனையின் ஹார்ட் இன்ஸ்டிடியூட் (இருதய சிகிச்சை மையத்தை) திறந்து வைத்தார். 

1 ஆகஸ்ட், 2023: சென்னை:  சென்னை, ரேடியல் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் அதிக எதிர்பார்ப்புகள் பெற்ற விரிவான இதயநல சேவைகளை வழங்குவதற்கான காவேரி “ஹார்ட் இன்ஸ்டிடியூட்” 2023 ஆகஸ்ட் 1-ம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.  சர்வதேச தரத்தில் இதயம் மற்றும் இரத்தநாளம் தொடர்பான சிகிச்சைகளையும், இந்த நவீன சிகிச்சை மையம் முழுமையாக வழங்கும்.  

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன், இதன் தொடக்கவிழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  இதயநல சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த அவர், இங்கு வழங்கப்படுகின்ற மிக நவீன இதயநல சேவைகள் பற்றி மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடி அறிந்துகொண்டார். நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை வழங்குவதில் தனித்துவ நிபுணத்துவம் கொண்டிருக்கும் காவேரி மருத்துவமனை ரேடியல் சாலை இப்புதிய சிகிச்சை மையமும், அதே உயர் அளவிலான சேவைகளை வழங்கி, குணப்படுத்தும் மற்றும் உயிர்காக்கும் பணியை சிறப்பாக செய்யும் என்ற தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.  உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளுக்கே இணையான உயர்தர இதயநல சிகிச்சையை வழங்குவதில் காவேரி மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு மாண்புமிகு அமைச்சரின் பாராட்டும், அங்கீகாரமும் நேர்த்தியான சான்றாக திகழ்கின்றன  சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பு வசதிகளில் நம் நாட்டில் தமிழ்நாடு மாநிலம் கொண்டிருக்கும் தலைமைத்துவ நிலையை காவேரி மருத்துவமனையின் இப்புதிய ஹார்ட் இன்ஸ்டிடியூட் மேலும் வலுப்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  

அனைத்து நோயாளிகளுக்கும் இதயம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முழுமையான தீர்வை வழங்குவதற்கான மிக நவீன, இடையீட்டு இதயவியல் சிகிச்சை மையமாக காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் உருவாக்கப்பட்டிருக்கிறது.  காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் மருத்துவர் குழுவில் அவரவர் துறைகளில் அனுபவமும், திறனும் கொண்ட முன்னோடிகளாகத் திகழும் உயர் தகுதி வாய்ந்த இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இந்த இன்ஸ்டிடியூட்டின் உலகளாவிய செயல்பாடு, யுஎஸ்ஏ, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய வளர்ச்சி பெற்ற நாடுகளில் இயங்கி வரும் புகழ்பெற்ற இதய சிகிச்சை மையங்களோடு மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பின் வழியாக மேலும் வலுப்படுத்தப்படும்.  

“சென்னை, ரேடியல் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் தேசிய அளவில் உயர்நேர்த்தி சிகிச்சை மையமாக நிறுவப்பட்டுள்ள காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் – ஐ தொடங்குவதில் நாங்கள் பெருமிதமும், உற்சாகமும் கொண்டிருக்கிறோம்.  இதய சிகிச்சையில், அனுபவம் மிக்க மருத்துவர்கள் குழு, மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகள், மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இது சர்வதேச தரநிலைகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் செயல்பாடுகளிலும் சிறப்பு கவனம் செலுத்தும்.  மிதமான கட்டணத்தில் சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை பலன்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட பிரத்யேக சிகிச்சையை இதயநோய்கள் மற்றும் பிரச்சனைகள் உள்ள அனைத்து நோயாளிகளும் பெறுவதை காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் உறுதிசெய்யும்.” என்று காவேரி மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர். எஸ். சந்திர குமார் கூறினார். 

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர்  மற்றும்  செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இது தொடர்பாக பேசுகையில், “காவேரி மருத்துவமனையின் இப்புதிய ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில், மிக நவீன நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ செயல்முறைகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.  ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT), ரொட்டாபிளேஷன், இன்ட்ரா – வாஸ்குலர் அல்ட்ராசவுண்டு (IVUS)  மற்றும் அதிக இடர்வாய்ப்புள்ள சருமத்து ஊடான கரோனரி இடையீட்டு சிகிச்சை (CHIP PCI), ஆகிய மேம்பட்ட செயல்முறைகள் இவற்றுள் சிலவாகும்.  மாரடைப்புகளை விரைவாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு OCT இமேஜிங் தொழில்நுட்ப சேவையை வழங்கும் திறன்கொண்ட தென்னிந்தியாவின் முதல் சிகிச்சை மையங்களுள் இம்மையமும் ஒன்றாகும்.  கூடுதலாக, குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு மிக மிக குறைவான ஊடுருவல் உள்ள இதய சிகிச்சை செயல்முறைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதிலும் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் சிறப்பு கவனம் செலுத்துகிறது.” என்று குறிப்பிட்டார். 

இதயவியல் துறையின் தலைவரும். தலைமை இருதய சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் டாக்டர். அஜித் பிள்ளை கூறியதாவது: “எமது ஹார்ட் இன்ஸ்டிடியூட், இடையீட்டு இதயவியல் சிகிச்சையில் உயர்நேர்த்தி சேவை மையமாகும்.  இந்நாட்டில் அதிக சிக்கலான இடையீட்டு இதயவியல் செயல்முறைகளை நாங்கள் வெற்றிகரமாக மேற்கொள்கிறோம்.  ரெட்ரோகிரேடு சிடிஓ, டிரான்ஸ்கதீட்டர் வால்வு மாற்று சிகிச்சை மற்றும் சிக்கலான ஒழுங்கற்ற இதயத்துடிப்பை சீராக்குவதற்கான மேம்பட்ட செயல்பாடுகள் ஆகியவை இவற்றுள் சிலவாகும்.  இதய செயலிழப்பு / அதிர்ச்சியுடன் கூடிய முற்றிய கரோனரி தமனி நோய்க்கு சிகிச்சையளிக்க CHIP PCI மையத்தையும் மற்றும் மெக்கானிக்கல் சர்குலேட்டரி சப்போர்ட் சிஸ்டம் (இம்பெல்லா, எக்மோ) என்பதையும் இம்மருத்துவமனை நிறுவியிருக்கிறது.  நோயாளிகளின் நலன் மீது அக்கறையும், உயர்சிகிச்சையின் மூலம் குணமளிப்பதில் பொறுப்புறுதியும் கொண்டிருக்கும் இம்மையம், அனுபவமும், அர்ப்பணிப்பும் உள்ள மருத்துவ நிபுணர்களையும், இதயம் தொடர்பான அனைத்து அவசரநிலை நேர்வுகளையும் கையாள்வதற்கு மிகச்சிறந்த, நவீன சாதனங்களையும், தொழில்நுட்பத் திறனையும் பயன்படுத்துகிறது.” 

இந்த இன்ஸ்டிடியூட் செயல்படுத்தும் தனித்துவமான ஹப் அண்டு ஸ்போக் மாதிரி, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளை பிற மருத்துவமனைகள் இங்கு பரிந்துரைப்பதற்கான வசதியை வழங்கும்.  இதன்மூலம் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சை பலன்கள் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.  சிகிச்சைக்குப் பிறகு மீண்டு குணமடைவதற்கான குறைந்த காலஅளவு மற்றும் மிகக்குறைந்த சிகிச்சை தழும்பு ஆகிய ஆதாயங்களை வழங்குகின்ற மிகக்குறைவான ஊடுருவலுடன் மேற்கொள்ளப்படும் இதய மற்றும் நெஞ்சக அறுவைசிகிச்சை செயல்திட்டமும் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.  

சென்னை, ரேடியல் சாலையில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடங்கப்பட்டிருப்பது காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.  சென்னை மாநகரிலும் மற்றும் அதனைக் கடந்தும் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய இதய நல சிகிச்சை பராமரிப்பை காவேரி மருத்துவமனை தொடர்ந்து மறுவரையறை செய்து வருவது யாவரும் அறிந்ததே. சர்வதேச தரங்களில் மிக நவீன சிகிச்சைகள் நமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் இம்மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதியை, உலகளவில் புகழ்பெற்ற மருத்துவமனைகள் மற்றும் இதய சிகிச்சை மையங்களோடு இது மேற்கொண்டிருக்கும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.  

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை