அடியே திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக வளர்ந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அடியே. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் கௌரி கிஷன், இவர்களுடன் பிரபு உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படத்தில் ஹீரோ வாழ்க்கையில் எந்த ஒரு ஆர்வமும் பிடிப்பும், லட்சியமும் இல்லாமல் இருக்கிறார். பின் ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு வருகிறார். தற்கொலை நேரத்தில் தான் பிரபல பாடகராக இருக்கும் கதாநாயகி அவருடைய பள்ளி தோழி என்பது தெரிய வருகிறது. கதாநாயகியின் பேட்டியை டிவியில் ஹீரோ பார்க்கிறார். அப்போது அவர் தனக்கு பள்ளி பருவத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம் குறித்து கூறுகிறார்.
அதை எழுதியவரை தேடுவதாகவும் சொல்லி இருக்கிறார். இதை அறிந்த ஹீரோ தன் காதலை கதாநாயகி இடம் சொல்ல முயற்சிக்கிறார். அப்போ எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் அப்போ கொள்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அவரை ஆல்டர்நெட் ரியாலிட்டிக்குள் தள்ளுகிறது. டைம் ட்ராவலில் சிக்கிக்கொண்ட ஹீரோ தன் காதலில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இரண்டு உலகம், இரண்டு பெயர்கள் என்ற ரோலில் ஜிவி பிரகாஷ் நடித்து இருக்கிறார்.
ஆனால், எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துகிறார். படம் முழுக்க கதாநாயகி பயணம் செய்வது போல இருக்கிறது. இருந்தாலும், அவர் தனக்கு கொடுத்த இருக்கிறது. சிறப்பாக செய்து இருக்கிறார். படம் ஆரம்பத்தில் பள்ளி பருவம், காதல், மீண்டும் அதே காதல், பிரச்சினைகள் என்று எங்கு செல்கிறோம் என்று புரியாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. பின் ஒரு கட்டத்தில் இயக்குனர் மையக்கதைக்கு வருகிறார்.
அதோடு காதல் காட்சிகளில் பேசப்படும் வசனங்கள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆல்டர்நேட் ரியாலிட்டி என்ற வித்தியாசமான கான்செப்டில் சுவாரசியத்தை கொடுக்காமல் இயக்குனர் வித்தியாசமான ஏற்றி இருக்கிறார். படத்தில் நிறைய லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் பார்வையாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், சில காட்சிகள் அவர்கள் பொறுமையை சோதித்து இருக்கிறது. இரண்டாம் பாதத்திற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் திட்ட வைத்திருக்கிறார்கள் ஓடும் மெட்ரோ ரயில், பறக்கும் தட்டுகள் காட்சிகள் எல்லாம் சிறப்பாக கொடுத்து இருக்கலாம். கிரியேட்டிவிட்டியாக செய்கிறேன் என்று இயக்குனர் சொதப்பி வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஐடியாவில் கவனம் செலுத்திய இயக்குனர் கதைக்களத்தை கொண்டும் செல்லும் விதத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். அடியே படம் சிறப்பாக இருந்திருக்கும்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
ஒளிப்பதிவு ஓகே.
இப்படம் காதலர்களுக்கு ஒரு சுமாரான படமாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை