சற்று முன்



இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சேம்பியன்ஷிப்” – கோல்ஃப் போட்டி !

2023 டாடா ஸ்டீல் பிஜிடிஐ சீசனின் இரண்டாவது பகுதியின் தொடக்கமாக சென்னையில் ஆகஸ்ட் 16 முதல் ஆரம்பமாகும் !

இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சேம்பியன்ஷிப்” – கோல்ஃப் போட்டி 

பிஜிடிஐ – க்கு டூர் பார்ட்னராக இணையும் வேதிகா ஹிமாலயன் ஸ்பிரிங் வாட்டர்  

ஓம் பிரகாஷ் சௌஹான், அமன் ராஜ், யுவராஜ் சிங் சாந்து, ஜமால் ஹுசைன் ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்றும் முன்னணி வீரர்களுள் சிலர் 

சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்விற்கு மிக அதிக தொகையாக 50 இலட்சம் ரூபாய் இப்போட்டிக்கு பரிசாக வழங்கப்படுகிறது 

சென்னை: ஆகஸ்ட் 14, 2023:  இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சேம்பியன்ஷிப் 2023, கோல்ஃப் போட்டி நடைபெறவிருப்பதை இப்போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் இந்தியாவில் தொழில்முறை கோல்ஃப் போட்டிகளுக்கு அனுமதியும் அங்கீகாரமும் வழங்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான புரொஃபஷனல் கோல்ஃப் டூர் ஆஃப் இந்தியா (PGTI), ஆகியவை ஒருங்கிணைந்து இன்று அறிவித்திருக்கின்றன.  2023 ஆகஸ்ட் 16 முதல், 19-ம் தேதி வரை தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷனின் (TNGF) காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.  தொழில்முறை ரீதியிலான இப்போட்டியில் மொத்தத்தில் ரூ.50 இலட்சம் என்ற பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.  கோல்ஃப் வீரர்களுக்கான புரோ – அம் நிகழ்வு ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும்.  

2023-ம் ஆண்டுக்கான டாடா ஸ்டீல் பிஜிடிஐ சீசன் – ன், விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த இரண்டாவது பகுதி தொடங்கப்படுவதை சென்னையில் நடைபெறவிருக்கும் இப்போட்டித் தொடர் குறிக்கிறது.  சென்னையில், ஆண்பாலருக்காக நடைபெறும் ஒரு தொழில்முறை விளையாட்டுப்போட்டி நிகழ்விற்கு வழங்கப்படக்கூடிய மிக அதிக அளவிலான பரிசுத்தொகையை இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சேம்பியன்ஷிப் 2023 நிகழ்வு வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை – தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. என். ஸ்ரீனிவாசன் இது தொடர்பாக கூறியதாவது: “உலகெங்கிலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற, அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்ற,சிறப்பாக கொண்டாடப்படுகின்ற விளையாட்டுகளுள் ஒன்றாக கோல்ஃப் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  சென்னையில் கோல்ஃப் விளையாட்டிற்கான மைதானத்தை உருவாக்குவதற்கும் மற்றும் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துவதற்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கணிசமான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறது.  

தீவிர ஆர்வமும், முனைப்பும் கொண்ட கோல்ஃப் விளையாட்டு வீரராகவும் நான் இருக்கும் நிலையில், சென்னையில் நந்தனத்தில் உள்ள கோல்ஃப் மைதானத்தை மிக நவீன தரநிலைகள் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, 1996-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன், இவ்விளையாட்டை முன்னிலைப்படுத்துவதில் ஆற்றியிருக்கும் முக்கிய பங்கு குறித்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.  கடந்த பல ஆண்டுகளில் இக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.  கோல்ஃப் விளையாட்டை பெரிதும் நேசிக்கும் இந்தியர்களும் இங்கு வந்து தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் நந்தனத்தில் அமைந்துள்ள கோல்ஃப் மைதானத்தில் அதிக எண்ணிக்கையில், பேரார்வத்தோடும், உற்சாகத்தோடும் விளையாடுவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.”

திரு. என். ஸ்ரீனிவாசன் மேலும் பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகள் காலஅளவில் தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் இந்த மைதானத்திற்காக ஏராளமான பணத்தை செலவிட்டிருக்கிறது.  நவீன வசதிகள், சிறப்பான உட்கட்டமைப்பு, பசுமையை பேணுதல், பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்கள் குழு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பச்சை பசேலென்ற கோல்ஃப் விளையாட்டு மைதானமாக இதனை அழகாக மாற்றியிருக்கிறது.  அத்துடன், கோல்ஃப் விளையாட்டில் ஆர்வம் கொண்ட நபர்களுக்கு பயிற்சியளிக்க ஒரு கோல்ஃப் அகாடமியையும் உருவாக்கி இங்கு நடத்தி வருகிறது.  மிக சமீபத்தில், ஒரு புதிய கிளப் ஹவுசையும் தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் இங்கு நிறுவியிருக்கிறது.” என்று கூறினார். 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தையாக்கல் அதிகாரியும் மற்றும் தீவிர கோல்ஃப் விளையாட்டு வீரருமான திரு. பார்த்தசாரதி ராமானுஜம் பேசுகையில், “ஒரு செழுமையான விளையாட்டு பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இந்தியா சிமெண்ட்ஸ் கொண்டிருப்பது பலரும் அறிந்ததே.  இந்த கோல்ஃப் போட்டி நிகழ்வின் டைட்டில் ஸ்பான்சராக இணைந்திருக்கும் நாங்கள், நீண்டகாலம் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட கோல்ஃப் சேம்பியன்ஷிப் போட்டித்தொடர் சென்னைக்கு திரும்பவும் வந்திருப்பதில் உள்ளபடியே பெருமை கொள்கிறோம்.  

“இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 75 ஆண்டுகால சிறப்பான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது.  தென்னிந்தியாவில் சிமெண்ட் தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக செயலாற்றி வருகிறது.  சக்தி மற்றும் நிலைப்புத்தன்மை என்பவற்றோடு ஒருங்கிணைந்ததாக மக்களால் கருதப்படும் இந்தியா சிமெண்ட்ஸ், விளையாட்டுக்கான பங்களிப்பிற்காகவும், நாடெங்கிலும் பெரிதும் மதிக்கப்படும் பிரபலமான நிறுவனமாக இருக்கிறது.  பல்வேறு விளையாட்டுகளின் மேம்பாட்டிற்காக இந்நிறுவனம் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது.  அதன் ஒரு அங்கமாக, தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் வழியாக, கோல்ஃப் விளையாட்டிற்கும் மற்றும் கோல்ஃப் வீரர்களையும் உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் தொடர்ந்து பங்களிப்பை செய்து வருகிறது.” என்று கூறினார். 

சென்னையில் நடைபெறும் இப்போட்டி நிகழ்வில் 123 தொழில்முறை (புரொஃபஷனல்) விளையாட்டு வீரர்கள் மற்றும் மூன்று அமெச்சூர்கள் உட்பட, 126 கோல்ஃப் வீரர்கள் பங்கேற்கின்றனர்.  ஓம் பிரகாஷ் சௌஹான் (டாடா ஸ்டீல் பிஜிடிஐ தரவரிசையில் முதன்மை வகிப்பவர்), அமன் ராஜ், யுவராஜ் சிங் சாந்து, கரன் பிரதாப் சிங், சச்சின் பைசோயா மற்றும் கௌரவ் பிரதாப் சிங் போன்ற பல பிரபலமான இந்திய புரொஃபஷனல் கோல்ஃப் வீரர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.  

இந்நிகழ்விற்கான டூர் பார்ட்னராக பிஸ்லேரி வேதிகா ஹிமாலயன் ஸ்பிரிங் வாட்டர் பிராண்டை பிஜிடிஐ பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.  ஹிமாலய மலைப்பிரதேசத்திலிருந்து பொங்கி வரும் தெளிவான, தூய்மையான நீரூற்றிலிருந்து தயாரிக்கப்படும் வேதிகா ஒரு சிறப்பான தயாரிப்பாகும்.  வேதிகா ஹிமாலயன் ஸ்பிரிங் வாட்டர் என்பது, இயற்கையான ஒற்றை நீர் ஆதாரத்திலிருந்து, அதன் அமைவிடத்திலேயே பாட்டிலில் அடைக்கப்படும் தூய்மையான நீராகும்.  இயற்கையாகவே கிடைக்கக்கூடிய கால்சியம், மெக்னீசியம், சோடியம், சல்பேட்டுகள் மற்றும் பயோகார்பனேட்கள்  போன்ற தாதுச்சத்துக்களின் நேர்த்தியான சமநிலையைக் கொண்டதாக வேதிகா ஹிமாலயான் ஸ்பிரிங் வாட்டர் வினியோகிக்கப்படுகிறது.  இயற்கையாகவே கார அமிலத்தன்மை உள்ளதாக இருப்பதால், மனஅழுத்தம் அதிகம் உள்ள பரபரப்பான நமது நகர்ப்புற வாழ்க்கைக்கு மனதையும், உடலையும் சாந்தப்படுத்தும் எதிர்ப்பு மருந்தாக செயல்படும் ஒரு இயற்கையான ஆன்டாசிட் (அமில எதிர்ப்பி மருந்து) ஆக இது திகழ்கிறது.  

பிஸ்லேரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் – ன் சந்தையாக்கல் துறை தலைவர் திரு. துஷார் மல்ஹோத்ரா கூறியதாவது: “பிஸ்லேரி வேதிகா ஹிமாலயன் ஸ்பிரிங் வாட்டர், நவீன, உலகில் கிடைக்கக்கூடிய நேர்த்தியான பொருட்களை நுகர விரும்பும் நபர்கள், உடல்நலம் மீது அக்கறையுடன் சிறப்பு கவனம் செலுத்தும் நுகர்வோர்கள் அதிகமாக தேர்வு செய்யும் சிறப்பான விருப்பத்தேர்வாக இருக்கிறது.  #FullOfAltitude நிறைந்த வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு புரொஃபஷனல் கோல்ஃப் டூர் உடனான எமது ஒத்துழைப்பு மிகப்பொருத்தமான நிகழ்வாக இருக்கிறது” 

பிஜிடிஐ – ன் தலைமை செயல் அலுவலர் திரு. உத்தம் சிங் முண்டி பேசுகையில், “இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சேம்பியன்ஷிப் நிகழ்வை தொடங்குவதில் எங்களோடு கூட்டுவகிப்பால் இணைந்து செயல்படுவதற்காக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த நன்றி.  இந்தியாவில் விளையாட்டுகளின் மிகச்சிறந்த புரவலராகத் திகழும் இந்தியா சிமெண்ட்ஸ் – ன் இந்த ஆதரவின் மூலம் இந்திய புரொஃபஷனல் கோல்ஃப் – ன் வளர்ச்சி மேலுமொரு மிகப்பெரிய ஊக்கத்தைப் பெறுகிறது.  பிஜிடிஐ – ன் குறிக்கோளையும், தொலைநோக்குப் பார்வையையும் எம்மோடு இணைந்து பகிர்ந்து கொள்வதற்காக தனிப்பட்ட முறையில் திரு. என். ஸ்ரீனிவாசனுக்கு இத்தருணத்தில் நன்றிகூற நான் விரும்புகிறேன்.  டிஎன்ஜிஎஃப் காஸ்மோ கோல்ஃப் மைதானத்தில் இந்நிகழ்வை நடத்தியதன் மூலம் கடந்த சீசனில் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட பிஜிடிஐ நிகழ்வு சென்னைக்கு திரும்ப வருவதற்கு திரு. என். ஸ்ரீனிவாசனின் ஊக்கமும், ஆதரவுமே உதவியிருக்கிறது.” என்று கூறினார். 

அவர் மேலும் பேசுகையில், “இந்நிகழ்வின் டூர் பார்ட்னராக பிஸ்லேரி வேதிகா ஹிமாலயன் ஸ்பிரிங் வாட்டர் பிராண்டுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  நேர்த்தி நிலையை எட்டுவதே பிஸ்லேரி வேதிகாவின் குறிக்கோளாகவும், முயற்சியாகவும் இருப்பதால் இதுவொரு மிகப்பொருத்தமான கூட்டிணைவாகும்.  நீண்டகாலம் நீடிக்கும் மற்றும் பரஸ்பர ஆதாயமளிக்கும் நல்லுறவை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.  இந்த சீசனின் கிளர்ச்சியூட்டும் இரண்டாவது பகுதி தொடங்கவிருக்கும் நிலையில் இதில் பங்கேற்கவிருக்கும் அனைத்து கோல்ஃப் வீரர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டார்.  

தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷனின் (TNGF) கௌரவ செயலாளர் திரு. ஆர்.கே. ஜாவர் பேசுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிஎன்ஜிஎஃப் காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் – ல் ஒரு பிஜிடிஐ போட்டித் தொடரை ஏற்பாடு செய்து நடத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  தமிழ்நாடு காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் – ன் சவால்மிக்க தளவமைப்பும், நிலைமைகளும், இந்தியாவின் முன்னணி தொழில்முறை கோல்ஃப் வீரர்களின் திறன்களை சவாலுக்கு உட்படுத்தி சோதிக்கும் என்பதால், கடும் போட்டிகள் நிறைந்த, சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத போட்டியிருக்கும் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம்.  சிறப்பான விளையாட்டு சூழலையும், நிலைமைகளையும் வழங்குவதற்காக நாங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறோம்.  இப்போட்டியில் கிடைக்கக்கூடிய  அனுபவத்தை விளையாட்டு வீரர்கள் ரசித்து அனுபவிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார். 

இப்போட்டிக்காக வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் கோல்ஃப் வீரர்களுள் பங்களாதேஷைச் சேர்ந்த ஜமால் உசைன் மற்றும் படால் உசைன் மற்றும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த என். தங்கராஜா மற்றும் மிதுன் பெரேரா, ஜப்பான் நாட்டின் மகோடோ இவாசாகி மற்றும் நேபாளைச் சேர்ந்த சுக்ரா பகதூர் ராய் ஆகிய முக்கியமான சிலரும் இடம்பெற்றுள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த போட்டியாளர்களில் சென்னையை தளமாக கொண்டு இயங்கும் தொழில்முறை கோல்ஃப் வீரர்களுள் திரு. சி. அருள் முதன்மை வகிக்கிறார்.  

போட்டி நிகழ்விடப் பார்ட்னராக டிஎன்ஜிஎஃப் காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் , விருந்தோம்பல் பார்ட்னராக கிரவுன் பிளாசா சென்னையும் இந்நிகழ்விற்கான அசோசியேட் பார்ட்னராக பாலன்டைன்  ஆகியோர் இடம்பெறுகின்றனர்.  

பிஜிடிஐ – ன் டூர் பார்ட்னர்களான டாடா ஸ்டீல், ரோலெக்ஸ், அமிர்தாஞ்சன் ஃப்ரூட்னிக் எலக்ட்ரோ+, கோல்ஃப்+ மன்த்லி மற்றும் அத்லெட்டிக் டிரைவ் ஆகியவற்றின் ஆதரவுடனும் இந்நிகழ்வு நடைபெறுகிறது.  

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை